கர்ணனின் கவசத்தை உடைக்க 1000 வருட போராடிய கிருஷ்ணன்! கர்ணனின் முன் ஜென்மக்கதை?

0
182
#image_title

மகாபாரதத்தில் அத்தனை வீரர்கள் இருந்தாலும் மிகவும் மிகவும் போற்றப்படக்கூடியவர் போற்றப்பட்டவர் கர்ணனே.

 

என்னதான் எதிரிகளின் பக்கத்தில் கர்ணன் இருந்தாலும் அனைத்து வீரர்களிலும் தலைசிறந்த வீரர்களில் ஒன்றாக இருந்தவர் கர்ணன் மட்டுமே. கர்ணனை வெல்லவே அத்தனை மர்மங்களையும் அத்தனை சதிகாரியங்களையும் கிருஷ்ண பகவான் செய்தார் என்றே சொல்லப்படுகிறது.

 

ஆயிரம் வருடங்கள் போராடித்தான் கர்ணனின் கவசத்தை உடைத்தார் என்று புத்தகங்கள் சொல்லப்படுகின்றது. இத்தனை பேர் இத்தனை வீரர்கள் இருக்க எப்படி கர்ணனுக்கு மட்டும் அந்த கவசம் வந்தது.அதற்கு காரணம் என்ன? என்று நாம் பார்க்க வேண்டும். இதற்கு ஒரு கதை உள்ளது அது கர்ணனின் முன் ஜென்ம கதை.

 

கர்ணனின் முன் ஜென்மக் கதை:

 

முன் ஜென்மங்களில் அசுரர் குளத்தில் ஒரு குழந்தையாக பிறந்தவர் தான் சஹஸ்வரன். முன் ஜென்மத்தில் அசுரர்கள் மற்றும் தேவர்கள் இடையே பெரும் போட்டி நிலவியது. அதில் தேவர்கள் அசுரர்களை அடிமையாக நடத்தி வந்தனர். நடத்தி வரும் இந்த தேவர்களை பார்த்தால் அசுர குளத்தில் இருக்கும் சஹஸ்வரனுக்கு பிடிக்காமல் போனது. அப்பொழுதும் இயற்கை தன்னையே பாதுகாத்துக் கொள்ளும் என்று சொல்வார்கள். தன்நிலை மீறும் பொழுது அதுவே சமநிலைக்கு மாறும் என்று சொல்வார்கள். ஆனால் இப்பொழுது தேவர்கள் அசுரர்களை அடிமையாக நடத்துவதால் சமநிலை மாறியது.

 

இதனால் சஹஸ்வரன் பிரம்மலோகத்திற்கு சென்று பிரம்மனை நோக்கி தவம் செய்ய ஆரம்பித்தான். வருடங்கள் 100 வருடமானது,ஆயிரம் வருடமானது, ஒரு யுகமானது ஒரு யுகமாக பிரம்மதேவரின் நோக்கி சஹஸ்வரன் தவம் புரிந்தான். இவனது தவத்தில் குளிர்ந்த பிரம்மதேவன் நேரடியாக வந்து அவன் தவத்தை கலைத்தார்.

 

இப்பொழுது பிரம்மதேவன் சஹஸ்வரனிடம் என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்.இத்தனை நாள் ஒரு யுகமாக என்னை நினைத்து யாரும் தவம் செய்ததில்லை உனக்கு என்ன வரம் வேண்டுமானாலும் கேள் நான் தருகிறேன் என்றார்.

 

இதனால் சகஸ்வரனும் தேவர்கள் எங்களை அடிமையாக்கி நடத்தி வருகின்றனர். அதனால் அவர்களை வெல்ல எனக்கு கவசம் வேண்டும் என்று கேட்டார்.

 

பிரம்ம தேவரும் உடனே சகஸ்வரனுக்கு ஆயிரம் கவசங்களை கொடுத்தார். இந்த ஒரு கவசத்தை உடைக்க ஆயிரம் வருடங்கள் ஆகும். ஒருவர் ஆயிரம் வருடம் வாழ்ந்து தவம் செய்து அந்த வரத்தை பெற்றால் மட்டுமே உனது ஒரு கவசத்தை உடைக்க முடியும் என்று பிரம்மதேவர் சஹஸ்ரனுக்கு வரம் அளித்திருந்தார். அப்படி ஒரு கவசம் உடைந்தால் அடுத்த கணமே மறுக்கவசம் உன்னை பாதுகாக்கும் என்று பிரம்மதேவர் அளித்திருந்தார்.

 

இந்த வரத்தை பெற்ற சஹஸ்வரனோ தேவர்களை அடிமையாக்க ஆரம்பித்தான். சமநிலை தவறியதால் தேவர்கள் காக்கும் கடவுளான விஷ்ணுவிடம் சென்றனர். பிரம்மன் அளித்த வரத்தை பற்றி நன்றாக தெரியும். நான் உடனே இரண்டு அவதாரங்களை எடுத்தார் கிருஷ்ண பகவான். ஒன்று மனிதனாகப் பிறந்து பூமியில் பிரம்ம தேவரை நோக்கி தவம் புரிய ஆரம்பித்தார்.இன்னொரு முறையில் கிருஷ்ணனாக சகஸ்வரனின் கவசத்தை உடைக்க முயற்சி செய்தார்.

 

இப்படி ஒவ்வொரு ஆயிரம் வருடங்களுக்கும் ஒவ்வொரு கவசத்தை கிருஷ்ண பகவான் உடைத்து கொண்டே வந்தார். ஒவ்வொரு கவசம் உடையும் பொழுதும் அதிலிருந்து ஒரு சிறிய துண்டை எடுத்துக்கொண்டு போய் சகஸ்வரன் மாலையாக சேர்த்து வந்தான். உனது கடைசி கவசம் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் நேரடியாக சூரிய பகவானிடம் சென்று உதவி கேட்டான் சகஸ்வரன். மறுபிறவியில் இந்த கவசம் என்னுடன் வரவேண்டும் என்று சூரிய பகவானிடம் உதவி கேட்ட சகஸ்வரன் சூரிய பகவானும் அதற்கு வரம் அளித்தார். நாள் தான் அடுத்த பிறவியில் கர்ணனாக பிறக்கும் பொழுது அவருக்கு கவச குண்டலம் பிறக்கும் பொழுதே இருந்தது.

 

கிருஷ்ண பகவான் இந்திரனை வைத்து தானமாக கர்ணனே வழங்கும் படி அதை செய்தார். பாரத போரில் கர்ணன் இறந்தான்.

 

author avatar
Kowsalya