கொத்தடிமை மற்றும் குழந்தை தொழிலாளர்கள் பற்றிய தகவல் தெரிந்தால் இந்த எண்ணிற்கு அழைக்கலாம்!

Photo of author

By Parthipan K

கொத்தடிமை மற்றும் குழந்தை தொழிலாளர்கள் பற்றிய தகவல் தெரிந்தால் இந்த எண்ணிற்கு அழைக்கலாம்!

Parthipan K

Krishnagiri, child labour

கொத்தடிமை மற்றும் குழந்தை தொழிலாளர்கள் பற்றிய தகவல் தெரிந்தால் இந்த எண்ணிற்கு அழைக்கலாம்!

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தீபக் ஜோக்கப் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார், அதில் பெரிய நிறுவங்கள், தொழில்சாலைகள் போன்ற இடங்களில் கொத்தடிமை மற்றும் குழந்தை தொழிலாளர்கள் பற்றிய தகவல் தெரிந்தால் இந்த எண்ணிற்கு அழைக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்கு எளிதில் புரியும் வகையில் பி.எஸ்.என்.எல். தொலைத்தொடர்பு எண் 155214 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது என்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தீபக் ஜோக்கப் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கொத்தடிமை மற்றும் குழந்தை தொழிலாளர்கள் குறித்த புகார்கள் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 4252 650 என்ற எண் நடைமுறையில் உள்ளது என்று கூறினார், மேலும் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ள 155214 என்ற எண்ணிலும் தொடர்புகொண்டு பொதுமக்கள் தங்கள் புகார்களை பதிவு செய்யலாம் என்று தெரிவித்தார்.