பணம் தராததால் ஏற்பட்ட பரிதாபம்! ரியல் எஸ்டேட் அதிபர் படுகொலை!

Photo of author

By Sakthi

தளி அருகே ரியல் எஸ்டேட் அதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பிரபல ரவுடி உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அடுத்த பெல்லூரை சார்ந்தவர் லோகேஷ் ரியல் எஸ்டேட் அதிபரான இவருடைய நண்பர் குருபராப்பள்ளியை சேர்ந்த எதுபூஷன் ரெட்டி இவர் மீது காவல் நிலையங்களில் கொலை உட்பட பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கிறார்கள். இந்த சூழ்நிலையில், லோகேஷ் இடம் 5 லட்சம் ரூபாய் பணம் கேட்டு எதுவும் பேட்டி மிரட்டல் விடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அவர் பணம் கொடுப்பதற்கு மறுத்திருக்கிறார்.

இவ்வாறான சூழ்நிலையில், எதுபூஷன் ரெட்டி பிரபல ரவுடி கஜா என்பவருடன் இணைந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு லோகேஷின் வீட்டுக்கு சென்றிருக்கிறார். அங்கே உறங்கிக் கொண்டிருந்த அவரை வெளியே இழுத்து வந்து இருவரும் பணம் கேட்டு அடித்து இருக்கிறார்கள். ஆனால் லோகேஷ் பணம் தருவதற்கு சம்மதம் தெரிவிக்க மறுத்து விட்ட படியால் ஏதுபூஷண் ரெட்டி தான் வைத்திருந்த துப்பாக்கியால் அவரைச் சுட்டு விட்டார். இதில் படுகாயமடைந்த அவரை மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபோன்ற சூழ்நிலையில், இந்த தகவலை அறிந்துகொண்ட தேன்கனிக்கோட்டை உதவி மாவட்ட கண்காணிப்பாளர் சங்கீதா தலைமையில் காவல்துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வு செய்து வைத்துவிட்டு விசாரணை செய்ய தொடங்கினார்கள். அதோடு தப்பியோடிய கொலையாளிகள் எதுபூஷன் மற்றும் கஜாவை தீவிரமாக தேடிவந்தனர். இந்த சூழலில் காரில் தப்பிச் செல்வதற்கு முயற்சி செய்து இருவரையும் நேற்று பூனம் பள்ளி சோதனை சாவடியில் காவல்துறையினர் கைது செய்தார்கள். தொடர்ச்சியாக இருவரிடமும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.