உலகம் முழுவதும் கரோனா தொற்று பரவலால் பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கரோனா தாக்கம் அதிகமாகி இருப்பதால், உலக அளவில் கரோனா தொற்று அதிக அளவில் பாதிக்கப்படும் பட்டியலில் இந்தியா முதலில் உள்ளது.
இந்த நிலையில், கரோனா பரவல் குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கூறி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையானாது, கடந்த 24 மணிநேரங்களில் நாடு முழுவதும் கொரோனா தொற்றினால் 64, 399 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இந்தியாவின் மொத்த பாதிப்பாக 22 லட்சத்தை தாண்டி 22,13,500 ஆக உள்ளது. இதுவரை மொத்தம் இருந்தவர்கள் 44, 475 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகமாகி வருவதால் உலகிலேயே கரோனா அதிகமாக பரவும் பட்டியலில் முதலிடம் உள்ளது.
மேலும் இந்தியாவில் பாதிக்கப்பட்டு இறப்பு விகிதம் 2.07 ஆக உள்ளது. தமிழகத்திலும் நாளுக்குநாள் கரோனாவின் பரவல் அதிகமாகிக்கொண்டே வருகிறது. இதுவரை தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு 3 லட்சத்தை நெருங்குகிறது.
மேலும் இந்தியாவில் பரிசோதனைகளை பொருத்தவரை, 10 லட்சம் பேரில் 17,805 பேருக்குத்தான் பரிசோதனை வசதிகள் செய்யப்படுகின்றன. ஆனால் அமெரிக்காவில் 1,80,219 பேர், 2,05,833 பேர் ரஷ்யாவிலும் என பரிசோதனை வசதிகள் உள்ளன. ஆகவே அதிகமாக பரிசோதனை மேற்கொள்ளும் போதுதான் தீவிரமாக கண்காணித்து ஒழிக்க முடியும்.
மக்களிடையே பொதுவாகவே மத்திய மற்றும் மாநில அரசுகளின் வாயிலாகவும். ஊடகங்கள் வாயிலாகவும் பிரச்சாரங்களை ஏற்படுத்துவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனால் பீதிதான் நிலவுகிறது. ஆனால் இறப்பு விகிதம் குறைவாக கொண்டது என்ற உண்மை நிலையை மக்கள் அறியவில்லை. மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் மத்திய மாநில அரசுகள் தோல்வியடைந்து விட்டன.
கரோனா தொற்று குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த அரசுகளும், பொதுநல அமைப்புகளான அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், மகளிர் அமைப்புகள், தன்னார்வலர்கள் போன்ற அமைப்புகளை மாநில அரசுகள் பயன்படுத்தி இது குறித்தான விழிப்புணர்வினை பிரச்சாரம் செய்ய வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு நம்பிக்கை பிறக்கும்.
அதேபோலத்தான் இளம்பிள்ளை நோய், எய்ட்ஸ் நோய் ஆகியவற்றிற்கு எதிராக தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் செய்த விழிப்புணர்வு பிரச்சாரம் தான் நோய் குறித்த அச்சம், பீதியும் முழுமையாக ஒழிக்கப்பட்டு விட்டது.
ஆகவே மத்திய மாநில அரசுகள் கரோனா பரவல் குறித்தான விழிப்புணர்வினை தீவிரமாக மக்களிடையே பரவச் செய்ய வேண்டும். இதனை அரசுகளும் தன்னார்வ மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
இத்தகைய அணுகுமுறையின் மூலமே கரோனா தொற்று பரவலை ஒழிக்க முடியும்.”
இவ்வாறு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.