கே.எஸ் அழகிரி உடனே பதவி விலக வேண்டும்! பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்!

Photo of author

By Rupa

கே.எஸ் அழகிரி உடனே பதவி விலக வேண்டும்! பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்!

அண்மை காலமாக காவேரி மேகதாது அணை கட்டுத்தல் பிரச்சனை தீவீரமாக நடந்து வருகிறது.முதலில் மேகதாது அணை கட்டுதல் பற்றி முன்னால் கர்நாடக முதல்வர் தமிழக முதல்வருக்கு கடிதம் ஒன்றை எழுதினர்.அதில் மேகதாது ஆணை கட்டுதலுக்கு ஒப்புதல் அளிக்குமாறு கடித்தத்தில் கூறியிருந்தார்.அதற்கு பதில் கடிதத்தில் ஒருபோதும் அணை கட்டுவதற்கு சம்மதம் அளிக்க மாட்டோம் என்று தமிழக முதல்வர் கூறியிருந்தார்.

பலர் அணை கட்டுவதை எதிர்த்து தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை  மேகதாது ஆணை கட்டுவதை எதிர்த்து தஞ்சாவூரில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக கூறினார்.அப்போராட்டம் நடத்துவதற்கு முதலில் போலீசாரிடம் அனுமதி கேட்டார்.போலீசார் அனுமதி தர மறுத்துவிட்டனர்.இருப்பினும் அவர் போராட்டக்களத்தில் இன்று இறங்கிவிட்டார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி,மூத்த தலைவர் இல.கணேசன்,பாஜக செயலாளர் எச்.ராஜா,முன்னால் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் போன்றோர் 500 க்கும் மேற்பட்டோர் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டனர்.இந்த போராட்டத்தின் நடுவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அதில் அவர் கூறியது,எங்களது போராட்டத்தை பார்த்து பல அரசியல்வாதிகள் கிண்டல் அடித்து வருகின்றனர்.அதில் குறிப்பாக காங்கிரஸ் தலைவர்  கே.எஸ்.அழகிரி இந்த போராட்டத்தை பற்றி மிகவும் அவதூறாக பேசியுள்ளார்.

அதனால் அவர் உடனே பதவி விலக வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்தார்.அதுமட்டுமின்றி இவரை போலவே தயாநிதிமாறன் எங்கள் போராட்டத்தை பற்றி இழிவாக பேசினார்.இன்னும் ஓர் முறை இவ்வாறாக பேசினால் அவர்கள் செய்த காரியம் அனைத்தும் தெருவுக்கு வந்துவிடும் என கோபமாக பேசினார்.மேலும் அவர் கூறியது,இந்த போராட்டமானது கர்நாடக காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகளை எதிர்த்து தான் நடைபெறுகிறது.காவேரி மேலான் ஆணையம் அனுமதி இல்லாமல் ஒருபோதும் மேகதாது அணைகட்ட முடியாது என்றும் கூறினார்.