பிக் பாஸ் நிகழ்ச்சியை லாக் செய்த கே எஸ் ரவிக்குமார்!! இனி தொகுப்பாளர் இவராக இருக்குமோ??

0
124
Bigg Boss is the best show of small screen!! Locked by KS Ravikumar!!
Bigg Boss is the best show of small screen!! Locked by KS Ravikumar!!

பிக் பாஸ் நிகழ்ச்சியை லாக் செய்த கே எஸ் ரவிக்குமார்!! இனி தொகுப்பாளர் இவராக இருக்குமோ??

விஜய் டிவில் ஒளிபரப்பு செய்யப்படும் ஒரு பொழுது போக்கு நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இதற்கு என்றே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.இந்த நிகழ்ச்சியை பார்பதற்கு என்று ஒரு ரசிகர் கூட்டமே இருக்கின்றது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக கமல் உள்ளார். இந்த நிகழ்ச்சி தொடங்கி 6 சீசன் முடிவடைந்துள்ளது.தற்பொழுது சீசன் 7 தொடங்க உள்ளது.

கமல் வெள்ளித்திரையில் இருந்து இந்த சின்ன திரைக்கு தொகுப்பாளராக வந்துள்ளார் என்பதால் இவரின் சம்பளம் எவ்வளவு இருக்கும் என்று ரசிகர்களிடையே எப்பொழுதும் கேள்வி இருந்து கொண்டே இருக்கும்.

கமல் எப்பொழுதும் தனக்கு ஒய்வு கொடுக்காமல் எதையோ ஒன்று செய்து கொண்டே இருப்பார். அப்படி தான் இந்த பிக் பாஸ் என்கின்ற நிகழ்ச்சியிலும் தொகுத்து வழங்கினார்.இந்த நிகழ்ச்சியானது சீரியலை காட்டிலும் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்று தொலைக்காட்சியின்  டிஆர்பயையும் ஏற்றி கொடுத்தது.

மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் நிகழ்ச்சிகளில் இது தான் நல்ல ரேட்டிங்கை பெற்றது.இப்படி பல தரப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற பிக் பாஸ் சீசன் 7 அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

தற்பொழுது இந்த நிகழ்ச்சி துவங்குவதற்கு கால தாமதம் ஆகலாம் என்று கூறப்படுகின்றது அதற்கு முக்கிய காரணம் கமல் அவர்கள் இந்தியன் 2 மற்றும் ப்ராஜெக்ட் போன்ற இரண்டு படப்பிடிப்பு பணியில் உள்ளார் என்பது என்று கூறப்படுகின்றது.

இந்த நிகழ்ச்சியால் தான் விஜய் டிவியின்  டிஆர்பி ஏறிக்கொண்டு வந்த நிலையில் இப்பொழுது கே எஸ் ரவிக்குமார் அவர்களால் பிக் பாஸ் மிகழ்ச்சி லாக் செய்யப்பட்டுள்ளது.

இதனால் எப்படியும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடங்குவதற்கு மூன்று மாத காலம் ஆகும் என்பதால் தற்பொழுது விஜய் டிவியானது புதிய சீரியல் ஒன்றை ஒளிபரப்பு செய்ய முடிவு செய்துள்ளது.

Previous articleலியோவின் தெலுங்கு உரிமம் மட்டும் இவ்வளவு கோடியா?? மிரள வைத்த தகவல்!!
Next article76 லட்சம் மோசடி செய்த தனியார் நிறுவன இயக்குனர்!! போலீசார் அதிரடி நடவடிக்கை!!