சிம்புவை இப்படிதான் நான் வழிக்குக் கொண்டுவந்தேன்:முன்னாள் இயக்குனர் புலம்பல்!அப்பவோ அப்படியா?

0
190

சிம்புவை இப்படிதான் நான் வழிக்குக் கொண்டுவந்தேன்:முன்னாள் இயக்குனர் புலம்பல்!அப்பவோ அப்படியா?

சிம்பு நடிக்க வந்த புதிதிலேயே முன்னணி இயக்குனர் ஒருவரிடம் தனது வேலையைக் காட்டிய சம்பவம் பற்றி அவர் பேசியுள்ளார்.

சிம்புவால் பாதிக்கப்பட்டு பல கோடிகளை இழந்த தயாரிப்பாளர்கள் பலர் இன்று புலம்ப ஆரம்பித்துள்ளனர். இன்றாவது சிம்பு ஒரு முகம் தெரிந்த பிரபல நடிகர். அதனால் அவரது இத்தகைய சேட்டைகளை ஏதாவது கொஞ்சம் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் தனது ஆரம்பக் காலத்தில் இருந்தே சிம்பு இப்படிதான் என்பதை மூத்த இயக்குனர் ஒருவரின் சமீபத்தின் பேட்டி மூலம் தெரியவந்துள்ளது.

இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் ரஜினி, கமல், அஜித்,விஜய் உள்ளிட்ட அனைத்து தமிழ் சூப்பர் ஸ்டார்களையும் இயக்கியவர். அவர் இயக்கத்தில் சிம்பு நடிக்க ஒரு படம் உருவானது. அப்போது பிஸியாக இருந்தாலும் ரீமேக் படம் என்பதால் அதை இயக்க ரவிக்குமார் ஒத்துக்கொண்டுள்ளார். ரவிக்குமார் எப்போதுமே படத்தை குறுகிய காலத்தில் இயக்க வேண்டும் என நினைப்பவர். அதனால் பரபரப்பாக ஷூட்டிங்கை நடத்தி வந்துள்ளார். ஆனால் சிம்பு வழக்கம் போல தாமதமாக வந்ததால் இரண்டு நாட்கள் ஷூட்டிங் பாதித்துள்ளது.

இதனால் அதிருப்தியான கே எஸ் ரவிக்குமார் சிம்புவைத் தனியாக அழைத்து ‘நான் இந்த படத்தில் இருந்து விலகிக் கொள்கிறேன், நீ வேறு ஆளை வைத்து இயக்கிக் கொள்’ என சொல்லியுள்ளார். இதைக் கேட்டு சிம்பு அதிர்ச்சியாக கே எஸ் ரவிக்குமார்’ நான் பிஸியாக இருந்தாலும் சீக்கிரமே முடிக்கலாம் என்றுதான் இந்த படத்தை ஒப்புக்கொண்டேன். ஆனால் நீ தாமதமாக வந்தால் தயாரிப்பாளருக்கும் எனக்கும்தான் நஷ்டம்’ எனக்கூறியுள்ளார். அதன் பிறகே சிம்பு ஒழுங்காக ஷூட்டிங் வந்து அந்த படத்தை முடித்துக் கொடுத்துள்ளார்.

இந்த சம்பவத்தை கே எஸ் ரவிக்குமாரே சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Previous articleமுரசொலி அலுவலக மூலப் பத்திர விவகாரத்தில் பாமகவிடம் மண்டியிட்ட திமுக! உற்சாகத்தில் பாமகவினர்
Next articleமருத்துவ கழிவுகளுடன் சென்னை வந்துள்ள சீன கப்பல்! அனுமதிக்க கூடாது- மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை