குபேரன் நிதி பெற்ற திருத்தலம் எங்குள்ளது தெரியுமா?

0
258

மதுரை வைகையாற்றின் வடபுறத்தில் அமைந்திருக்கிறது திருவாப்புடையார் கோவில் மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தின் உப கோவிலாக திகழும் இந்த கோவில் தொடர்பாக திருஞான சம்பந்தர் தேவாரப் பாடல் ஒன்றையும் பாடியிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

புண்ணிய சேனன் என்பவர் சகல செல்வங்களுக்கும் அதிபதி ஆக வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என அகத்தியரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் தெரிவித்த அகத்தியர் திருவாப்புடையார் என்ற இந்த தலத்தில் சிவபெருமானை நோக்கி தவம் புரிய வேண்டுமென்று தெரிவித்தார். அதனடிப்படையில், தவம் புரிந்த புண்ணிய சேனனுக்கு நிதியை நிர்வகிக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டதாம்.

இதன் காரணமாக, ஆணுவமுற்ற புண்ணிய சேனன் யாரையும் மதிக்காமல் நடந்து கொண்டாராம். இதனால் அவருடைய ஒரு கண் பார்வையை பறித்தார் சிவபெருமான். இதனை தொடர்ந்து தவறை நினைத்து வருந்திய அவருக்கு மறுபடியும் நிதியை நிர்வகிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது. அதோடு குபேரன் என்ற பெயரையும் சிவபெருமான் சூட்டினார் என்று தெரிவிக்கப்படுகிறது.

Previous articleஇந்த ராசிக்காரர்களுக்கு பெற்றோர்களின் அனுகூலம் கிடைக்கும்!
Next articleதிருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள்! மாதம் 25000 சம்பாதிக்க ரெடியா?