காணமால் போன குழந்தையை மீட்டு தந்த போலீசாருக்கு பாராட்டு!!குழந்தையை கட்டி அழுத தாயின் பாசம்!…
சேலம் தாதகாப்பட்டி கேட் சௌந்தர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கணபதி மனைவி கங்கா. இவர்களுக்கு மாறன் என்ற ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த தம்பதி தாதகாப்பட்டி உழவர் சந்தை பகுதியில் காய்கறி கடையை நடத்தி வருகின்றனர்.
இதனால் கணபதி அதிகாலையிலேயே கடையை திறக்க வேண்டும் என்பதற்காக சந்தைக்கு சென்றுள்ளார்.அப்போது அவரது மனைவி கங்கா உறங்கிக் கொண்டிருக்கும்போது அதிகாலை திடீரென மாறன் வீட்டிலிருந்து வெளியே சென்று விட்டான். கங்கா அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்ததால் மாறனை சரிவர கவனித்து வரவில்லை.
வழி தவறிய மாறன் சௌந்தர் நகர் பகுதியில் அழுதபடியே அங்கும் இங்கும் சுற்றி திரிந்தார். அப்பகுதியில் வசிக்கும் ஊர் மக்கள் யாவருக்கும் இந்த குழந்தையை அடையாளம் தெரியவில்லை. இதனிடையே குழந்தை காணாமல் போன அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் அக்கம் பக்கத்தில் உள்ள பகுதிகளில் சென்று தேடி வந்தனர்.
தாதகாப்பட்டி உழவர் சந்தை அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுகொண்டிருந்தனர் அப்போது சப் இன்ஸ்பெக்டர் பழனிசாமி அங்கு அழுதபடி நின்ற மாறனை கண்டார்.பின் அந்த குழந்தையை நோக்கி சென்றார். மாறனிடம் சிறு பேச்சுகளை கொடுத்தார்.
விசாரித்த சப் இன்ஸ்பெக்டர் பக்கத்தில் உள்ள வியாபாரியிடம் விசாரித்த போது இந்த குழந்தை காய்கறி வியாபாரியான கணபதி கங்கா தம்பதியின் குழந்தை என தெரியவந்தது. குழந்தையை அங்கிருந்து மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் இந்த செயலைக் கண்டு அப்பகுதி மக்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.