மது போதைக்கு அடிமையான பள்ளி தலைமை ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை

0
282
Dead
Dead

மது போதைக்கு அடிமையான பள்ளி தலைமை ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை

குளித்தலையில் மது போதைக்கு அடிமையான பள்ளி தலைமை ஆசிரியர், மனைவி தடுத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் குளித்தலை இமாம் சாகிப் நகர் பகுதியில் வசித்து வந்தவர் ரவிக்குமார் (38). இவர் கோட்டமேடு பகுதியில் செயல்படும் ஆதிதிராவிடர் நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். மது போதைக்கு அடிமையாக இருந்துள்ளார். இதனை இவர் மனைவி நிவேதா தடுத்து வந்துள்ளார்.

இதனால் விரத்தி அடைந்த ரவிக்குமார் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து வெளியே சென்று இருந்த நிவேதா வீட்டுக்கு திரும்பிய போது ரவிக்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

நிவேதா இது குறித்து குளித்தலை காவல் நிலையத்திற்கு அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்த ரவிக்குமாரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக குளித்தலை அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக குளித்தலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleகாசி தமிழ் சங்கத்திற்கு செல்லும் இரயிலை மாணவர்  அமைப்பு மறிக்க முயல்வதாக வெளிவந்த தகவல்! போலீசாரின் அடுத்தக்கட்ட அதிரடி நவடிக்கை!
Next articleமக்களே உஷார்! இந்த மாவட்டத்தில் மெட்ராஸ் ஐ நோய் தொற்று தீவிரம்! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here