Kurangu vetrilai: வாயு பிரச்சனையா? குரங்கு வெற்றிலை கிடைச்சா மிஸ் பண்ணிடாதீங்க..!

0
137
Kurangu vetrilai
#image_title

Kurangu vetrilai: நம்மை சுற்றி எத்தனையாே வகையான செடிகள், கொடிகள், மரங்கள் உள்ளன. அதன் மருத்துவ பயன்கள் எல்லாம் அளப்பறியது. ஆனால் அதனை பற்றி எல்லாம் நமக்கு அவ்வளவாக தெரிவது இல்லை. கிராமப்புறங்களில் அதிக அளவு காணப்படும் செடிகள், கொடிகள், மரங்கள் எல்லாம் மூலிகை தன்மை கொண்டவையாக உள்ளது.

பெரும்பாலும் கிராமங்களில் வாழ்ந்த 80ஸ் மற்றும் 90ஸ் கிட்களுக்கு பல வகையான செடிகள், இலைகள், பழங்கள், காய், பூக்களை பார்த்திருப்பார்கள். அந்தவகையில் அவர்கள் பார்க்கும் பாதி செடிகளை விளையாட்டு செடிகளாக தான் பார்த்துள்ளார்கள். இந்த குரங்கு வெற்றியிலையும் அப்படி தான். கிராமப்புறங்களில் அதிகம் பார்க்கப்பட்ட இந்த செடிகளை தற்போது பார்க்க முடிவதில்லை.

மேலும் இந்த குரங்கு வெற்றியிலையின் மருத்துவ பயன்களை (kurangu vetrilai benefits in tamil) பற்றி இந்த பதிவில் காண்போம்.

குரங்கு வெற்றிலை (அ) குருவி வெற்றிலை

இதனை குரங்கு வெற்றிலை (Carmona retusa) அல்லது குருவி வெற்றிலை என்று கூறுவார்கள். இந்த செடியில் எண்ணற்ற மருத்துவ பயன்கள் உள்ளன.

இந்த செடி சிறிய புதர் போன்ற அமைப்பில் வளரக்கூடிய செடியாகும். இந்த செடியில் வெள்ளை நிறத்தில் மூக்குத்தி போன்று பூக்கள் பூக்கும். இதன் காய் மிளகு அளவில் இருக்கும். இந்த காய் பழுத்தால் மஞ்சள் நிறத்தில் இருக்கும். சுவைப்பதற்கு இனிப்பாக இருக்கும். இந்த செடியில் உள்ள இலைகள் சிறிய அளவில் காணப்படும். அந்த இலையை தான் குரங்கு வெற்றிலை அல்லது குருவி வெற்றிலை என்று அழைக்கிறோம்.

கிராமப்புறங்களில் உள்ள பிள்ளைகள் இந்த இலைகளை ஒரு கைப்பிடி அளவு பறித்த அதனுடன் கிளுவ மரத்து இலையின் கொழுந்தை வைத்து வாயில் மென்றுவர வாய் வெற்றிலை போட்டால் எப்படி சிவக்குமாே அது போல் வாய் சிவப்பு நிறத்தில் மாறிவிடும். மேலும் இந்த குரங்கு வெற்றிலையுடன் கொண்ணை மரத்து இலையின் கொழுந்து வைத்து வாயில் மென்று வர வாய் சிவப்பு நிறத்தில் மாறிவிடும்.

மேலும் இந்த இலை வயிற்றுப்போக்கு, சீதப்பேதியை குணப்படுத்துவதில் சிறந்த மருந்தாக உள்ளது. மேலும் இந்த இலைகளை பறித்து நீரில் போட்டு கொதிக்க வைத்து காலை வெறும் வயிற்றில் குடித்து வர இருமல் குணமாகும்.

குழந்தை பெற்ற பெண்கள் இந்த செடியின் இலை, வேர் அனைத்தையும் நீரில் போட்டு, அதனுடன் கருஞ்சீரகம் 1 ஸ்பூன் போட்டு, நன்றாக சுண்டக்காய்ச்சி, அதில் கருப்படி அல்லது பனை வெல்லம் சேர்த்து காலை, மாலை குடித்த வந்தால் கர்ப்பபையில் உள்ள அழுக்குகள் வெளியேறிவிடும்.

மேலும் இந்த செடியின் வேர் விஷக்கடிக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. இந்த இலைகளை பறித்து வந்து நீரில் போட்டு கொதிக்க வைத்து சிறிய துண்டு இஞ்சி சேர்த்து, வெல்லம் சேர்த்து டீ போன்று குடித்து வர உடலில் உள்ள வாயு ஒரே நாளில் வெளியேறிவிடும்.

மேலும் படிக்க: தைராய்டு பிரச்சனைக்கு சின்ன வெங்காயத்தை இப்படி யூஸ் பண்ணுங்க!!