கட்டுமான ஊழியர்களுக்கு குஷியோ குஷி! வந்தாச்சு தீபாவளி போனஸ்!! எவ்வளவு கிடைக்கும் தெரியுமா?

Photo of author

By Vijay

நம் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.அதன்படி இந்த ஆண்டிற்கான தீபாவளி பண்டிகை வருகின்ற 31 ஆம் தேதி வரவிருக்கிறது. தீபாவளி பாண்டிகையை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு போனஸ், ஊதிய உயர்வு, கிப்ட்ஸ், இனிப்பு, ப்ரோமோஷன் போன்றவை வழங்கப்படுவது வழக்கம்.
தற்பொழுது மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்பு தொடர்ச்சியாக வெளியாகி கொண்டிருக்கிறது. இது அரசு ஊழியர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் விதமாக இருக்கிறது.
அதன்படி 2024-2025 ஆம் ஆண்டிற்கான தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. புதுவை கட்டிட தொழிலாளிகளுக்கு தீபாவளி போனஸ் குறித்த முக்கிய அறிவிப்பு அம்மாநில அரசு தற்பொழுது வெளியிட்டிருக்கிறது. கட்டிட தொழிலாளர்கள் தீபாவளி போனஸ் ரூ.5,000 மற்றும் அமைப்பு சாரா கட்டிடத் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் ரூ.1,500 வழங்கப்படும் என்று புதுவை அரசு தெரிவித்திருக்கிறது.
இதற்கு முன்னர் புதுவை விவசாயிகளின் விவசாயக் கடன் தள்ளுபடி, ரேசன் அட்டைதாரர்களுக்கு அரிசி சர்க்கரை இலவசம், அரசு ஊழியர்களுக்கு ரூ.7,000 போனஸ் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்ட புதுவை அரசு தற்பொழுது கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.5,000 போனஸ் வழங்கப்படும் என்று தெரிவித்திருப்பது கட்டுமான தொழிலாளர்களிடையே மிகுந்த மகழ்ச்சியை ஏற்படுத்தியிருப்பதோடு அதிக வரவேற்பை பெற்று வருகிறது.