இது வேற லெவல் பிரச்சாரம் போலிருக்கே..? -ஓட்டுக்காக பிரபல நடிகையின் செயல் வைரல்..!

Photo of author

By CineDesk

திமுகவின் இரும்புக்கோட்டை என்று கூறப்படும் ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் குஷ்பு பிரச்சாரத்தின் போது ஒருவரது வீட்டிற்குள் சென்று தானே டீ போட்டி அனைவருக்கும் கொடுத்து வாக்கு சேகரித்தார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தேர்தல் பிரச்சாரம் களைக்கட்ட தொடங்கியுள்ளது. ஆளும் அதிமுகவும், எதிர்கட்சியான திமுகவும் போட்டிப்போட்டுக் கொண்டு தேர்தல் பிரச்சாரத்தை கலகலக்க செய்கின்றனர். தொகுதி வாரியாக சென்று வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்கள் துணி துவைப்பது, இஸ்திரி செய்து கொடுப்பது, சமைத்து கொடுப்பது என நூதன முறையில் தங்களுக்கான வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் முதல்முறையாக களம்காணும் குஷ்பு ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். திமுகவின் கோட்டை என்று கூறப்படும் ஆயிரம் இந்த தொகுதியில் அதிகளவில் இஸ்லாமிய மக்கள் தங்களது முழு ஆதரவை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆயிரம் விளக்கு பகுதியில் பிரச்சாரத்திற்கு சென்ற குஷ்புவை பார்த்த முஸ்தபா – சலீன் ரீட்டா அவரை தங்களது வீட்டிற்கு வந்து தேனீர் அருந்த அழைத்தனர்.

அந்த தம்பதிகளுக்கு மதிப்பளித்து அவர்களின் வீட்டிற்கு சென்ற குஷ்பு இன்முகத்துடன் யாரும் எதிர்பாராத நிலையில் சரசரவென சமையலறைக்குள் நுழைந்து அனைவருக்கும் டீ போட ஆரம்பித்தார். அங்குள்ளவர்கள் குஷ்பு என்ன செய்கிறார் என்ற திகைப்பில் ஆழ்ந்திருக்க, சமையலறையில் அவரே சர்க்கரை, டீத்தூள், பால் என தேடி எடுத்து அனைவருக்கும் டீ தயாரித்தார். ஒரு பிரபலமாகவும், அரசியலில் பேர் சொல்லும் பெண்ணாகவும் இருக்கும் குஷ்பு ஒரு தொண்டர் வீட்டில் வந்து டீ போடுவதை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்தனர்.

பின்னர் தான் தயாரித்த டீ -யை எடுத்து வந்து அனைவருக்கும் குஷ்பு வழங்கினார். தேர்தல் விறுவிறுப்பில் விநோதமான முறையில் பிரச்சாரம் செய்து தனது அரசியல் அனுபவத்தை குஷ்பு வெளிப்பதை வருகிறார்.