முன்னோர்கள் அவர்களது உணவில் சிறுதானியங்களை சேர்த்து வந்தனர். அதனாலே அவர்கள் நோய் குறைவான வாழ்வை வாழ்ந்து வந்தனர்.அப்படி , முன்னோர்கள் சேர்த்து கொண்ட சிறுதானியங்களில் முக்கிய இடம் பெறுவது குதிரவாலி அரிசி. அதனை வைத்து சுவையான அப்பம் எப்படி செய்வது என தெரிந்து கொள்ளுவோம்.
தேவையானவை :
குதிரைவாலி அரிசி – 100 கிராம், இட்லி அரிசி – 100 கிராம், உளுந்து – 25 கிராம், வெந்தயம் – அரை தேக்கரண்டி, கருப்பட்டி – 200 கிராம், இளநீர் – அரை கப்.
செய்முறை :
குதிரைவாலி அரிசியுடன் இட்லி அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை ஊறவைத்து அதனை 2 மணி நேரம் கழித்து அரைக்கவும். அதனுடன் இளநீரை சேர்த்து கொள்ளுங்கள். இவற்றை 6 மணி நேரம் புளிக்க விடவும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து கருப்பட்டியை சேர்த்து பாகு காய்ச்சி வடிகட்டி கொள்ளவும். இதனை மாவுடன் சேர்த்து கரைத்து கொள்ளுங்கள். அடுப்பில் ஆப்ப சட்டியை வைத்து கொள்ளுங்கள். அதில் மாவை ஆப்பமாக ஊற்றி வேகவைத்து பரிமாறலாம். இதனுடன் தேங்காய் பால் சேர்த்து பரிமாறலாம்.