சாதியை வைத்து அரசியல் செய்யும் ஸ்டாலின்…! எல் முருகன் விளாசல்…!

Photo of author

By Sakthi

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கும் கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலுக்கும் தொடர்பு இருக்கின்றது என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எல் முருகன் தெரிவித்திருக்கின்றார்.

சென்னையில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் வேல்முருகன் அவர்கள் கந்த சஷ்டி கவசத்தை அவதூறாக பேசியவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருக்கின்றார்.கந்த சஷ்டி கவசத்தை அசிங்கப்படுத்திய கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலுக்கும் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கும் தொடர்பு இருக்கின்றது எனவும் அதேபோல பெண்களை இழிவாக பேசிய திருமாவளவனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருக்கின்றார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்.

தாழ்த்தப்பட்டோர் சமூக மக்களை இழிவு படுத்தினாலும் ஸ்டாலின் தண்டிக்க மாட்டார் அதேபோல பெண்களை அவதூறாக பேசினாலும் கண்டிக்க மாட்டார் இதன் மூலம் என்ன தெரிய வருகிறது என்றால் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்கள் தவறு செய்பவர்களை அரவணைத்து அவர்களை காப்பாற்றுவதுலேயே குறியாக இருக்கின்றார் என்று தெரிவித்திருக்கிறார்.
சில நாட்களுக்கு முன்பு பெண்களை திருமாவளவன் இழிவுபடுத்தி பேசியதற்காக அவர் மீது சென்னை சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

ஆனாலும் மனுதரும நூல்களில் பெண்கள் சம்பந்தமாக தெரிவித்திருப்பதை தான் திருமாவளவன் தெரிவித்திருக்கின்றார் எனவும் அரசியல் உள்நோக்கத்துடன் அவர் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளதாகவும் வைகோ ஸ்டாலின் உள்பட பல அரசியல் தலைவர்கள் அந்த வழக்கினை வாபஸ் வாங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருப்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.