முக்கிய தலைவர்கள் இல்லாமல் முதல் தேர்தல்…! மொத்த தொகுதிகளையும் வளைக்க திமுக போட்ட திடடம் …!

0
61

நாங்கள் எதிர்க்கட்சி என்ற காரணத்தால் அரசியல் தான் செய்வோம் இன்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான ஸ்டாலின் அவர்கள் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தபோது தெரிவித்திருக்கின்றார்.

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நெருங்கிக்கொண்டே வருகின்றது இந்த நிலையில் தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளான அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகள் தேர்தல் பணிகளை துரிதப்படுத்தி வருகின்றது தமிழ்நாட்டு அரசியலில் முக்கிய தலைவர்களாக இருந்து வந்த கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோர் இல்லாத நிலையில் நடக்கவிருக்கும் முதல் சட்டசபை தேர்தல் என்ற காரணத்தால் அடுத்து எந்தக் கட்சி ஆட்சியில் அமரப்போகிறது என்று அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கின்றது.

சமீப நாட்களுக்கு முன்னால் மருத்துவ படிப்பிற்கான இட ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளும் தரப்பிற்கு உதவுவதற்கு தயாராக இருக்கிறது திமுக என்ற அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார் ஆனாலும் அரசியல் லாபத்திற்காக அவர் இவ்வாறு தெரிவித்திருப்பதாக அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்தனர் இந்த நிலையில் ஆளும் கட்சியினர் தெரிவித்த கண்டனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்

எங்கள் கட்சி எதிர்க்கட்சி என்ற காரணத்தால் நாங்கள் அரசியல் தான் செய்வோம் என்று தெரிவித்திருக்கிறார் அதுபோல 7.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை காலாவதி ஆக்கும் விதத்தில் தமிழக ஆளுநர் செயல்படுகின்றார் எனவும் தெரிவித்திருக்கின்றார்.