சென்ற ஆண்டு மே மாதம் 15ஆம் தேதி அன்று திமுக உள்பட 11 கூட்டணி கட்சியினர் நோய்த்தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டு இருக்கின்ற பணியாளர்களுக்கு சிறப்பு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் கொடுக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதோடு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ஆறாம் தேதி அதிமுக அரசு முன்களப் பணியாளர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 25 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிட்டபோது அதனை திமுக எதிர்த்தது.
அப்போது ஸ்டாலின் அவர்கள் ஏப்ரல் மாதத்தில் அறிவித்தபடியே ரூபாய் 50 லட்சத்தில் இருந்து ரூபாய் 25 லட்சமாக குறைத்ததை கடுமையாக ஆட்சேபனை செய்தார் 50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் பதிவு செய்தார்.
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லியவண்ணம் செயல் என்ற திருவள்ளுவரின் குரலுக்கு ஏற்றவாறு எதிர்க்கட்சியாக இருந்த சமயத்தில் ஒன்றை தெரிவித்துவிட்டு ஆளுங்கட்சியாக வந்த பின்னர் மாறி பேசுவது அழகு கிடையாது.ஆகவே உடனடியாக முதலமைச்சர் தன்னுடைய சொற்படி உயிரிழந்த பணியாளர்களின் குடும்பத்திற்கு ரூபாய் ஒரு கோடியையும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் முருகன் தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக இந்த நோய்த்தொற்றின் பணியின்போது உயிரிழந்த 43 மருத்துவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 25 லட்சம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தது எல்லோரும் அறிந்ததே.