கூலி தொழிலாளி தற்கொலை! போலீஸார் விசாரணை!

Photo of author

By CineDesk

கூலி தொழிலாளி தற்கொலை! போலீஸார் விசாரணை!

CineDesk

Laborer suicide! Police investigation!

கூலி தொழிலாளி தற்கொலை! போலீஸார் விசாரணை!

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகேயுள்ள தாசநாயக்கன்பாளையம் பகுதியில் சேர்ந்த கோபால் (வயது70) . மேலும் அவர் விவசாயக் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு பல நாட்களாக நெஞ்சு வலியால் அவதிபட்டுள்ளார். இதைதொடர்ந்து அவருக்கு நேற்று தீராத நெஞ்சு வலி வந்துள்ளது. அப்போது அவர் வலி தாங்கமுடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதை கண்ட அக்கம்பக்கத்தினர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து அவரை பரிசோதனைகாக  அனுப்பியுள்ளனர். மேலும் அந்த பரிசோதனைக்கு முன் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினார்கள். இதுகுறித்து சங்ககிரி போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம்  அப்பகுதி மக்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.