உதயநிதியை எச்சரித்த உடன்பிறப்பு!

Photo of author

By Sakthi

காவல்துறையினர் லாடம் கட்டி விடுவார்கள் உங்கள் அப்பாவிற்கு மிசாவில் நடந்தது ஞாபகம் இருக்கின்றதா என்று உதயநிதிஸ்டாலினை திமுக தொண்டர் ஒருவர் எச்சரித்து இருக்கின்றார்.

திருப்பூரை சேர்ந்த கலையரசன் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பற்றி விமர்சனம் செய்திருப்பது இப்போது வைரல் ஆகி வருகின்றது அதில் தம்பி உதயநிதி நீங்க ஒரு கூட்டத்தில் பேசிய மிரட்டல் பேச்சை கேட்டேன் நானும் உங்க கட்சிக்காரன் தான் பல வருடங்களாக அரசியலில் இருக்கும் அனுபவத்தில் கூறுகின்றேன் காவல்துறையிடம் ஒட்டவும் கூடாது உரசவும் கூடாது அது உங்களுக்கு தெரியுமா என்று எனக்கு தெரியவில்லை.

நீங்கள் ஒரு கூட்டத்தின்போது பேசியபோது இன்னும் நாம் ஆட்சிக்கு வரவில்லை பார்த்துக்கொள்கிறோம் ஸ்பெஷல் டிஜிபி ராஜேஷ் தாஸ் பெயரை எல்லாம் நாங்கள் ஞாபகம் வைத்திருப்போம் இன்னும் 5 மாதம் தான் இருக்கின்றது எங்களுக்கு தெரியாத காவல்துறையா நாங்கள் பார்க்காத காவல்துறையா என்றெல்லாம் மிரட்டல் பாணியில் பேசி இருக்கிறீர்கள்.

அடுத்தது திமுக தான் ஆட்சிக்கு வரப் போகின்றது ஆகவே காவல்துறை அதிகாரிகள் அஞ்சி நடுங்கி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் போலிருக்கின்றது ஓய்வு பெறும் வரை பணியில் இருப்பவர்கள் காவல்துறையினர். அரசியல்வாதிகளைப் போல மாறக் கூடியவர்கள் கிடையாது ஒரு காவல்துறை அதிகாரி எப்போதுமே இன்னொரு காவல்துறை அதிகாரியை விட்டுக்கொடுக்க மாட்டார்.

காவல்துறை அதிகாரியை அதுவும் உயர் காவல்துறை அதிகாரியை இப்படி ஏளனமாக மிரட்டல் பாணியில் பேசினால் அதை மற்ற காவல்துறையினர் எப்படி எடுத்துக்கொள்வர் தன்னையே அவமானப்படுத்தும் வகையில் பேசியதாக தான் ஒவ்வொரு காவல் துறையினரும் எடுத்துக் கொள்வார்கள். ஒருவேளை திமுக மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாமல் போய் விட்டால் என்ன நடக்கும் என்பதை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் ஏதாவது ஒரு பிரச்சனையில் நீங்கள் மாட்டிக் கொண்டால் தெரியும் காவல்துறையினர் லாடம் கட்டிவிடுவார்கள் உங்கள் அப்பாவிற்கு மிசா வழக்கில் நடந்தது ஞாபகம் இருக்கின்றதா சிட்டிபாபு மட்டும் இல்லாமல் போயிருந்தால் இன்று தளபதி இருந்திருக்கவே மாட்டார் என்ன அடி அடித்தார்கள் எதனால் அடித்தார்கள் என அவருக்குத் தெரியும் என்று அறிவுறுத்தி இருக்கின்றார்.