பெண்களே உங்களுக்கு முடி கொட்டுகின்றதா!!! அதை சரி செய்ய செம்பருத்தி ஒன்று போதும்!!!

0
47
#image_title

பெண்களே உங்களுக்கு முடி கொட்டுகின்றதா!!! அதை சரி செய்ய செம்பருத்தி ஒன்று போதும்!!!

பெண்களுக்கு உள்ள முடி உதிரும் பிரச்சனையை சரி செய்வது எவ்வாறு, கூந்தலை நீளமாக வளர வைக்க என்ன செய்வது என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இன்றளவில் இருக்கும் பிரச்சனை கூந்தல் பிரச்சனை தான். சிலருக்கு முடி உதிர்வதாலும் கூந்தல் சேதம் அடைவதாலும் மன உளைச்சல் ஏற்படுகின்றது. அவர்கள் அனைவரும் முடி கொட்டுவதை நிறுத்த என்னதான் தீர்வு, கூந்தலை எவ்வாறு வளரச் செய்வது என்பது பற்றி தேடி தேடி பல வகையான எண்ணெய்களும் ஷேம்புகளும் தலைக்கு பயன்படுத்தி இருப்பார்கள்.

ஆனால் சிலருக்கு இந்த மருந்துகள் கை கொடுக்கும். சிலருக்கு கைகொடுக்காது. அவர்கள் அனைவருக்கும் இந்த பதிவில் தலைமுடி உதிர்வதை எவ்வாறு சரி செய்வது என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இயற்கையான முறையில் முடி உதிர்தல் பினச்சனைக்கு தீர்வு காணலாம். இயற்கையான முறையில் என்று கூறும் பொழுது நமது நினைவுக்கு வருவது செம்பருத்தி தான். செம்பருத்தி பூவை காலம் காலமாக முடி தொடர்பான பிரச்சனைகளுக்கு பயன்படுத்தி வருகிறார்கள். செம்பருத்தி பூ மட்டுமில்லாமல் செம்பருத்தி இலையையும் தலைமுடி பிரச்சனைக்கு பயன்படுத்தலாம்.

செம்பருத்தி மற்றும் செம்பருத்தி இலையை கொண்டு செம்பருத்தி மாஸ்த் தயாரித்து தலையில் அப்ளை செய்து வரும்.பொழுது முடி உதிர்தல் பிரச்சனை சரியாகும். மேலும் கூந்தல் நீளமாக வளரும். செம்பருத்தி மாஸ்க் எவ்வாறு தயார் செய்வது எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

செம்பருத்தி மாஸ்க் செய்ய தேவையான பொருள்கள்…

* செம்பருத்தி பூ
* செம்பருத்தி இலை
* தண்ணீர்

தயார் செய்யும் முறை…

முதலில் பிரெஷ்ஷாக பறித்த செம்பருத்தி பூக்கள், செம்பருத்தி இலைகள் இரண்டையும் எடுத்து கழுவிக் கொள்ளவும். பின்னர் செம்பருத்தி பூவின் இதழ்களையும் இலைகளையும் மிக்சியில் போட்டு தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை…

அரைத்த இந்த கலவையை தலைமுடி வேர் முதல் நுனி வரை தேய்த்துக் கொள்ள வேண்டும். தலைமுடியை கட்டி சுமார் 30 முதல் 40 நிமிடங்கள் வரை உலர வைக்க வேண்டும். பின்னர் ரசாயனம் குறைவாக உள்ள ஷாம்புவை கொண்டு தலையை அலச வேண்டும்.

மாதத்திற்கு இரண்டு செம்பருத்தி மாஸ்க்கை தலைக்கு தொடர்ந்து பயன்படுத்தி பாருங்கள். உங்கள் கூந்தலில் மாற்றங்கள் ஏற்படுவதை பார்க்கலாம்.