சருமத்தில் தேவையற்ற முடிகள் வளர்வது அழகை டேமேஜ் செய்வதோடு எரிச்சல் தரும் விஷயமாக இருக்கிறது.ஆண்களுக்கு மீசை,தாடி இருப்பது அழகு என்றால் பெண்களுக்கு மிருதுவான சருமம் இருப்பது அழகு என்று எண்ணப்படுகிறது.
ஆனால் இயற்கையாவே பெண்களுக்கு மீசை முடி வளர்வதால் அவற்றை அவ்வபோது ஷேவ் செய்து ஒரு வேலையாகவே உள்ளது என்று பலரும் புலம்புகினறனர்.ஷேவ் செய்வதால் மீசை முடி நிரந்தரமாக நீங்காது.இதற்கு மாற்று வழி கோதுமை பேக் மட்டுமே.
தேவையான பொருட்கள்:
1)கோதுமை மாவு – ஒரு தேக்கரண்டி
2)சர்க்கரை – அரை தேக்கரண்டி
3)மஞ்சள் பொடி – சிட்டிகை அளவு
4)எலுமிச்சை சாறு – இரண்டு தேக்கரண்டி
5)காபி தூள் – அரை தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:
மீசை முடிகள் மற்றும் முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை அகற்ற கோதுமை மாவு பேக் பயன்படுத்தலாம்.
கோதுமை பேக் தயாரிப்பது எப்படி?
முதலில் ஒரு தேக்கரண்டி கோதுமை மாவை கிண்ணத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.தங்களுக்கு முகத்தில் அதிகப்படியான முடிகள் இருந்தால் இரண்டு தேக்கரண்டி கோதுமை மாவு சேர்த்துக் கொள்ளலாம்.
பிறகு அரை தேக்கரண்டி வெள்ளை சர்க்கரை சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும்.அதன் பிறகு சிட்டிகை அளவு கஸ்தூரி மஞ்சள் பொடி மற்றும் அரை தேக்கரண்டி காபி தூள் சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.
பின்னர் எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி கோதுமை மாவில் சாறை பிழிந்து பேஸ்ட் பதத்திற்கு கலக்க வேண்டும்.
இதை மீசை முடி மற்றும் முகத்தில் வளரும் தேவையற்ற முடிகள் மீது பூசி 30 நிமிடங்களுக்கு உலரவிட வேண்டும்.பிறகு ஒரு கிளாஸ் நீரை லேசாக சூடுபடுத்தி கோதுமை பேக்கை துடைத்தெடுக்க வேண்டும்.இவ்வாறு செய்வதால் முகத்தில் உள்ள மீசை முடி கன்னத்தில் வளரும் முடிகள் அனைத்தும் நீங்கிவிடும்.