புதிய படம் அப்டேட்-வுடன் பிறந்தநாள் கொண்டாடும் லேடி சூப்பர் ஸ்டார்!!

Photo of author

By Vinoth

தமிழ் சினிமா துறையில் 2005ஆம் ஆண்டு வெளியான   ‘ஐயா’ படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நயன்தாரா (டயானா மரியம் குரியன்) அவர்கள்.  அவர் நடித்த மாயா, டோரா, அறம், கோலமாவு கோகிலா, பில்லா,  ராஜா ராணி, தனி ஒருவன், இமைக்கா நொடிகள்,  விஸ்வாசம் என அதிக படியான ஹிட் படங்களை தமிழ் சினிமாவில் கொடுத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. 

சமீபத்தில், அட்லீ இயக்கத்தில் வெளியான ‘ஜவான்’ படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். மேலும் அவர் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9ம் தேதி இயங்குனர் விக்னேஷ் சிவன்-வுடன்  திருமணம் செய்தது கொண்டார். தற்போது அவருக்கு உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வேக் N சிவன் என்ற இரு குழந்தைகள் உள்ளனர். மேலும் அவர்கள் திருமண ஆவணப்படம் இன்று நெட்ஃபிக்ஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

அதுமட்டுமின்றி அவர் புதிதாக நடித்து இருக்கும் “ராக்காயி” படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டது. இந்த படத்தை செந்தில் நல்லசாமி இயக்கத்தில் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். மேலும் இந்த படம் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் திரைக்கு வரும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படம் டிரம்சஸ்டிக்ஸ் புரொடக்சன் மற்றும் மூவிவெர்ஸ் இந்தியா தயாரிப்பு நிறுவனம் இணைந்தது படத்தை தயாரித்து வருகிறது.