பினாயில் குடித்துவிட்டு மரணம் அடைந்த பெண்! அதிர்ச்சியில் மக்கள்

Photo of author

By Parthipan K

கரூர் மாவட்டம் மொஞ்சனூர் பூண்டிப்பாலையத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் என்பவர். 34 வயதான இவர் தனது மனைவியுடன்
பொருட்களை தவணை முறையில் விற்கும் தொழில் பார்த்து வருகிறார்.

குடும்ப வறுமை காரணமாக வேலைக்கு செல்ல உள்ள நிலையில் கார்த்திகேயன் தனது தாயாரை பிள்ளைகளை பார்த்துக் கொள்ள வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.ஆனால் கார்த்திகேயனின் தாயாருக்கு அந்த ஊர் பிடிக்காமல் தன்னை வீட்டிற்கு அனுப்பி வைக்குமாறு பலமுறை மகனிடம் கூறியுள்ளார் .

ஊரடங்கு காரணமாக தாயை ஊருக்கு அனுப்ப இயலாத நிலையில் ஊரடங்கு முடிந்த பின்பு அனுப்பி வைப்பதாக அவர் தாயிடம் கூறியுள்ளார்.இதனை அடுத்து நேற்று முன்தினம் கார்த்திகேயனின் தாய் வீட்டிற்கு பின்புறம் உள்ள குழித்துறை ஆற்றில் முழ்கியுள்ளார்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் கார்த்திகேயனுக்கு தகவல் கொடுத்தனர், பிறகு அவர் வந்து தாயாரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் உயிர் இழந்த நிலையிலேயே மீட்டுள்ளார். இதனையடுத்து அங்கு வந்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கார்த்திகேயனின் தாய் பினாயில் குடித்து விட்டு ஆற்றில் மூழ்கியது தெரியவந்துள்ளது.

ஊரடங்கு காரணமாக சொந்த ஊர் செல்ல முடியாத நிலையில் கார்த்திகேயனின் தாய் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது. பின்னர் இவரது உடல் பிரேத பரிசோதனை செய்வதற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.