லட்சம் கோடி ரூபாய் நிதியுதவியை வேளாண் கட்டமைப்பு திட்டத்திற்கு கொடுத்த பிரதமர்

Photo of author

By Parthipan K

பிரதமர் நரேந்திர மோடி விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் பிரதமரின் கிசான் திட்டத்தை தொடக்கி வைத்தார்.
இந்தத் திட்டத்தின் கீழ் 8 கோடியே 55 லட்சம் விவசாயிகள் பயன் அடைந்து வருகின்றனர்.

நேற்று நரேந்திர மோடி அவர்கள், காணொலிக் காட்சி மூலமாக சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாயைநிதி உதவித் திட்டத்தை நேற்று துவக்கி வைத்தார். விவசாயிகளுக்கான பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ்,  8 கோடியே 55 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு, ஆறாவது தவணையாக ரூ.17,000 கோடி பிரதமர் நரேந்திர மோடி நிதி உதவி விடுவிக்கப்பட்டது.

இந்த பணமானது எவ்வித ஏஜென்ட்கள் யாருமின்றி விவசாய பெருமக்களின் வங்கிக்கணக்கில் செலுத்துவதால் எவ்வித அச்சமும் இன்றி இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.இந்தத் திட்டத்தினால் விவசாய பெருமக்கள் மனநிறைவு அடைவதை கண்ட நரேந்திரமோடி பெரு மகிழ்ச்சி அடைவதாக கூறியுள்ளனர்.
இந்தத் திட்டத்தினால் விவசாய அறுவடைக்குப் பிறகு விளைபொருட்களை பாதுகாக்கும், குளிர்சாதனப் பெட்டிகள் போன்றவற்றை பயன்படுத்தவும், கிழங்கு சேமித்து வைக்கும், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கச் செய்யவும், இத்திட்டத்தை தொடங்கி வைத்தனர்.