உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெற்ற ஈஸ்டர் சிறப்பு வழிபாட்டில் லட்சக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!!

Photo of author

By Savitha

உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெற்ற ஈஸ்டர் திருநாள் சிறப்பு திருப்பலியில், லட்சக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு. இயேசு கிறிஸ்து உயிர்த்து எழும் திருநாள் நிகழ்ச்சியில் தமிழகம், கேரளா,ஆந்திரா, கர்நாடகாவை சேர்ந்த கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்து வழிபாடு.

படக்காட்சிகள்:ஆலயம், திருப்பலி, பாதிரியார்கள், கிறிஸ்தவர்கள், இயேசு கிறிஸ்து.

பேட்டி:டேவிட் தன்ராஜ். வேளாங்கண்ணி பேராலய உதவிப் பங்குத்தந்தை.

இயேசு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டு உயிர்த்தெழுந்த உயிர்ப்பு தின நிகழ்ச்சியை ஈஸ்டர் பெருவிழாவாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகின்றனர்.

இதேபோல் நாகை மாவட்டம் உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஈஸ்டர் திருநாள் சிறப்பு பிரார்த்தனை நள்ளிரவு நடைபெற்றது.

பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் நடைபெற்ற பாஸ்கா திருவிழிப்பு சிறப்பு திருப்பலியில் தமிழ்நாடு ஆந்திரா கேரளா கர்நாடகாவை சேர்ந்த லட்சக்கணக்கான கிறிஸ்தவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

அப்போது சிலுவை கொடியை கையில் தாங்கிய இயேசு கிறிஸ்து உயிர்த்தெழும் காட்சி மத்தாப்பு ஜொலிக்க தத்ரூபமாக நிகழ்த்தப்பட்டது. அதனை கண்டு அங்கு கூடி இருந்த கிறிஸ்தவர்கள் கைகளில் மெழுகுவர்த்தியை ஏந்தியவாறு பிரார்த்தனை செய்து ஈஸ்டர் திருநாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.

ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயத்தில் காலை, தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சிறப்பு திருப்பலி நடைபெருகிறது.

இதில் பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்று தவக்கால விரத்தை நிறைவேற்றுகின்றனர்.