பிக் பாஸ்  4-ல் பங்கேற்க உள்ள  லட்சுமி மேனன்! உச்சகட்ட குஷியில் ரசிகர்கள்!

Photo of author

By Parthipan K

அப்போ இப்போன்னு இழுத்துக்கிட்டே போன பிக் பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் மாதம் நான்காம் தேதி துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் பங்கேற்பாளர்கள் யார் என்ற விபரத்தை இதுவரை சஸ்பென்சாக வைத்துள்ளனர் பிக்பாஸ் குழுவினர்.

இந்நிலையில் லட்சுமி மேனன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. வெயிட் பிரச்சனையால் சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்த லட்சுமிமேனன் தற்போது உடல் எடையை குறைத்து விட்டாராம். மீண்டும் படங்களில் நடிக்க ஒப்புதலும் தெரிவித்திருக்கிறாராம்.

தனது re-entryயை லட்சுமிமேனன் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தன் கேரியரை துவங்கலாம் என நினைக்கிறார் என்ற தகவல் வெளியானதும் நாமறிந்ததே. அவரும் எந்தவித தகவலும் வெளிவிடாமல் இருந்ததனால் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு கொள்ள போகிறார் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் இருந்தனர்.

முன்னதாக நாசரின் மகன் அபிஹசன் பிக்பாஸ் வீட்டில் கலந்து கொள்ளப் போகிறார் என்று கூறப்பட்டது. ஆனால் அது உண்மையில்லை என்று சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு விளக்கம் அளித்து விட்டார் அபிஹசன்.

தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லை என்று விளக்கமளித்துள்ளார் லட்சுமிமேனன்.இச்செய்தியைக் கேட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.