மிஷ்கின் நடிப்பில் இளையராஜா இசையில் புதிய படம்… இயக்குனர் இவரா?

Photo of author

By Vinoth

மிஷ்கின் நடிப்பில் இளையராஜா இசையில் புதிய படம்… இயக்குனர் இவரா?

லஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கும் புதிய படத்துக்கு இளையராஜா இசையமைக்க உள்ளார்.

தமிழ் மற்றும் மலையாளத்தில் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் பல படங்களில் நடித்தவர் லஷ்மி ராமகிருஷ்ணன். மிஷ்கின் இயக்கிய யுத்தம் செய் படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் இவருக்குப் பாராட்டுகளைப் பெற்று தந்தது. இதையடுத்து அவர் டிவி ரியாலிட்டி ஷோவான சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பிரபலமானார்.

இது சம்மந்தமாக இவர் மேல் விமர்சனங்களும் ட்ரோல்களும் உருவாகினாலும், அந்த நிகழ்ச்சிக்கு அதிக பார்வையாளர்கள் கிடைத்தன. இந்நிலையில் லஷ்மி, இயக்குனர் அவதாரம் எடுத்து ஹவுஸ் ஓனர் மற்றும் அம்மணி ஆகிய படங்களை இயக்கினார். இந்த இரு படங்களும் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும், நல்ல பெயரைப் பெற்றன.

இதையடுத்து இப்போது இவர் தன்னுடைய மூன்றாவது படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சமுத்திரக்கனி, மிஷ்கின் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடந்து வரும் நிலையில் தற்போது இந்த படத்துக்கு இசையமைப்பாளராக இசைஞானி இளையராஜா ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இளையராஜாவை அவர் ஸ்டுடியோவில் சந்தித்துள்ள லஷ்மி ராமகிருஷ்ணன் இந்த அறிவிப்பை வெளியிட்டு அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.