பொங்கல் ரேசில் களமிறங்கும் லால் சலாம்!!! அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!!!
2024ம் ஆண்டுக்கான பொங்கல் அன்று நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்கும் லால் சலாம் திரைப்படம் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியிட்டுள்ளது.
இயக்குநரும் நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்கள் லால் சலாம் படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் லால் சலாம் திரைப்படத்தில் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.
லால் சலாம் திரைப்படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. லால் சலாம் திரைப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் அவர்கள் இசையமைத்துள்ளார். கிரிக்கெட் சம்பந்தமான கதையை மையமாகக் கொண்டு லால் சலாம் திரைப்படம் உருவாகி இருக்கின்றது. இந்நிலையில் லால் சலாம் திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.
அதன்படி நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் 2024ம் ஆண்டு பொங்களுக்கு வெளியாகவுள்ளது என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் நடித்துள்ள அயலான் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் அரண்மனை 4 திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே 2024ம் ஆண்டு பொங்களுக்கு மூன்று முக்கிய திரைப்படங்கள் வெளியாகவுள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகி இருக்கின்றது.