கோத்தகரியில் ஏற்பட்ட மண்சரிவு… உயிருடன் இரண்டு நபர்கள் பத்தியமாக மீட்பு!!

Photo of author

By Sakthi

கோத்தகரியில் ஏற்பட்ட மண்சரிவு… உயிருடன் இரண்டு நபர்கள் பத்தியமாக மீட்பு!!

Sakthi

Updated on:

கோத்தகரியில் ஏற்பட்ட மண்சரிவு… உயிருடன் இரண்டு நபர்கள் பத்தியமாக மீட்பு!!

 

கோத்தகிரி அருகே மண்சரிவில் சிக்கிய இரண்டு நபர்களை தீயணைப்பு துறை வீரர்கள் பத்திரமாக உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

 

தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழ் நாட்டில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகின்றது. மேலும் சில இடங்களில் பலத்த காற்றும் வீசி வருகின்றது. மலைப் பிரதேசங்களில் பெய்து வரும் மழையால் சில இடங்களில் கடும் குளிரும் மண் சரிவும் ஏற்பட்ட வண்ணம் உள்ளது.

 

இந்நிலையில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கட்டுமான பணி செய்து கொண்டிருந்த இரண்டு நபர்கள் மண்சரிவில் சிக்கியுள்ளனர். இவர்களை பத்திரமாக தீயணைப்பு துறையினர் மீட்டுள்ளனர்.

 

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கட்டப்பட்டு என்னும் பகுதியில் தர்மபுரி மாவட்டம் பொம்மிடி பகுதியை சேர்ந்த 30 வயதான குப்பு சாமி என்பவரும் 45 வயதான யுவராஜ் என்பவரும் தனியார் நிறுனத்தின் கட்டுமான பணியை செய்து கொண்டிருந்தனர். இவர்கள் இருவரும் 50 அடி ஆழத்தில் அஸ்திவாரம் தோண்டிக் கொண்டிருந்த பொழுது திடீரென்று அந்த பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது.

 

இந்த மண் சரிவில் கட்டுமான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த யுவராஜ் குப்புசாமி இருவரும் மண்ணில் புதைந்தனர்.

 

இருவரும் நிலசரிவில் சிக்கிய தகவல் அறிந்து வந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த தீயணைப்பு துறையினர் மண்சரிவில் சிக்கிய யுவராஜ், குப்பு சாமி இருவரையும் உயிருடன் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

மண் சரிவில் சிக்கிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் குப்பு சாமி, யுவராஜ் இருவருக்கும் தற்பொழுது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது.