மியான்மர் சுரங்கத்தில் நிலச்சரிவு! தொழிலாளர்கள் 50 பேர் பலி

0
161

மியான்மர் நாட்டில் உள்ள சுரங்கத்தில் பச்சை மரகதகல் வெட்டி எடுக்கும் பணி நடைப்பெற்று வருகிறது.இந்த சுரங்கத்தில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் 50 தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர்.எனவே நிலச்சரிவில் சிக்கியுள்ள மீதமுள்ள பணியாளர்களை மீட்க போராடி வருகின்றனர்.

மியான்மர் நாட்டின் கக்சின் மாநிலத்தில் மரகதகல் வெட்டி எடுக்கும் சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது.எனவே வழக்கம் போல் இன்று காலை பணியாளர்கள் பணியில் இருந்தனர்.அப்போது எதிர்பாராத விதமாக சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது.மேலும் அந்த பகுதியில் ஒரு வார காலமாக மழை பெய்து வருவதால் ஈரப்பதம் காரணமாக இந்த நிலச்சரிவு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்பட்டு வருகின்றனர்.

திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் அங்கு உள்ள பணியாளர்கள் மீது மண் குவிந்து அவர்கள் மண்ணில் சிக்கிகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும் இந்த நிலச்சரிவு காரணமாக 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழப்புகள் மேலும் நிகழாமல் தடுக்க தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர் அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.பல தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ள நிலையில் மேலும் உயிரிழப்புகள் நிகழலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Previous articleஇனி காணொளி மூலமாகவே புகார் அளிக்கலாம் சென்னை கமிஷனர் உத்தரவு!!!
Next articleமக்களே உஷார்…!!! கொரோனா பெயரில் கொள்ளை!!!!