கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 135 டன் பெரிய வெங்காயம் இறக்குமதி!

Photo of author

By Parthipan K

தற்போது வடமாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக பெரிய வெங்காயத்தை ஏற்றுமதி செய்து வரும் லாரிகள் தமிழகத்திற்கு வர தடை உருவாகியுள்ளது. இதனால் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 40 ரூபாய்க்கு ஏற்கனவே விற்கப்பட்டு இருந்தது. 

ஆனால் புதிய லோடுகள் வராததால் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர் சூழ்நிலையை தவிர்ப்பதற்கு எகிப்திலிருந்து பெரியவெங்காயம் தமிழகத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளது. அதாவது கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 135 டன் பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூபாய் 45 லிருந்து 60 ரூபாய்க்குள் விற்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி மத்தியபிரதேசத்தில் இருந்தும் மகாராஷ்டிராவில் இருந்தும் ஒரு நாள் ஒன்றுக்கு சுமார் 30 லாரிகள் அளவில் பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது.

பெரிய வெங்காயம் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும் சின்ன வெங்காயம் ஒரு கிலோ 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வை தவிர்ப்பதற்கு தற்போது புதிதாக வந்துள்ள பெரிய வெங்காயத்தை கிலோ 40 ரூபாயில் இருந்து 60 ரூபாய் வரை விற்கப்பட உள்ளதாக  வியாபாரிகள் முடிவெடுத்துள்ள  தகவல்கள் வெளியாகியுள்ளது.