எல்லாம் முடிந்து கைவிட்ட லாஸ்லியா!! 2 வது திருமணத்திற்கு ரெடியான கவின்!! 

0
161

எல்லாம் முடிந்து கைவிட்ட லாஸ்லியா!! 2 வது திருமணத்திற்கு ரெடியான கவின்!!

விஜய் தொலைக்காட்சி செல்ல பிள்ளையாக இருந்த கவின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பலரின் ஆதரவை பெற்று தற்பொழுது திரைத்துறையில் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். கிட்டத்தட்ட நான்குக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

குறிப்பாக இவர் இறுதியில் நடித்த டாடா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் கனா காணும் காலங்கள் என்ற நாடகத்தின் மூலம் அறிமுகமானார்.

ஆனால் சரவணன் மீனாட்சி என்ற நாடகத்தில் வேட்டையன் என்ற கதாபாத்திரம் தான் இவருக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது. பெரும்பாலான மக்களுக்கு கவின் என்பதை விட வேட்டையன் என்று தான் தெரியும்.

அதேபோல பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் சாண்டி மாஸ்டர் உடன் செய்த சேட்டைகள் அனைத்தையும் மக்கள் பெருமளவு ரசித்தனர்.அந்த பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பொழுது லாஸ்லியா மற்றும் சாக்ஷி இருவர் மீதும் காதல் வயப்பட்டார்.

ஆனால் லாஸ்லியா மற்றும் கவின் இருவரின் காதல் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள்ளேயே உறுதியானது. இவர்களின் காதல் ஸ்டோரியானது நிகழ்ச்சியை சற்று விறுவிறுப்பாக்க ஏதுவாக அமைந்தது.

மற்ற பிரபலங்களைப் போல இவர்களும் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்ததும் அவரவர் வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டனர். இந்த நிலையில் ஒரு சில தினங்களுக்கு முன்பு கவின் தான் காதலித்து வந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற தகவல் வெளிவந்தது.

இந்த செய்தியானது சமூக ஊடகங்களில் பரவ தொடங்கியதும், பலரும் பல கேள்விகளை கேட்க ஆரம்பித்து விட்டனர்.அந்தவகையில் லாஸ்லியா தற்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் ஒன்றை போட்டுள்ளார்.

அந்த போஸ்டுக்கு கீழ் பலர் கவின் திருமணம் குறித்து தொடர்ந்துகேள்வி கேட்டு வருகின்றனர். ஆனால் லாஸ்லியா அதற்கு எந்த ஒரு பதில் அளிக்காமல் மௌனம் காத்தே வருகிறார்.கவின் உங்களை காதலித்து கை விட்டு விட்டாரா என்று நெட்டிசன்கள் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Previous articleஇந்த முறை உலகக் கோப்பையை வெல்வதற்கு அதிக ஆதரவு இருக்கு… இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டி!!
Next articleகுழந்தையை சுட்டு கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட மருத்துவர்… அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!!