ஆதார் கார்டு புதுப்பிப்பதற்கான லாஸ்ட் டேட் கிட்ட நெருங்கிடுச்சு!! இலவசமாக அப்டேட் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்!!

Photo of author

By Divya

நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை முக்கிய அடையாள ஆவணமாக திகழ்கிறது.தற்பொழுது அனைத்து இடங்களிலும் ஆதார் நகல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் இன்றி அரசு நல திட்டங்கள் பெறுதல்,வங்கி கணக்கு திறத்தல் போன்ற எந்த ஒரு செயலையும் மேற்கொள்ள இயலாது.

அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் அட்டையை அவ்வப்போது புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.ஆனால் இந்தியாவில் சுமார் 40 லட்சத்திற்கும் அதிகமானோர் இதுவரை ஆதார் அட்டையை புதுப்பிக்கவில்லை என்ற தகவல் ;வெளியாகி இருக்கிறது.இந்நிலையில் ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பித்துக் கொள்ள கடந்த ஜூன் 14 வரை மத்திய அரசு அவகாசம் வழங்கியது.

பின்னர் மத்திய அரசு அதற்கான கால அவகாசம் செப்டம்பர் 14 ஆம் தேதி வரை நீட்டிக்க படுவதாக தெரிவித்தது.ஆதார் புதுபிப்பதற்கான கால அவகாசம் முடிய வாரங்கள் மட்டுமே இருப்பதால் விரைவில் அதை அப்டேட் செய்து கொள்ள வலியுறுத்தப்பட்டு இருக்கிறது. https://ssup.uidai.gov.in/ssup/ என்ற அதிகாரபூர்வ இணையதளம் வாயிலாக இலவசமாக ஆதார் அப்டேட் செய்து கொள்ள முடியும்.

https://ssup.uidai.gov.in/ssup/ என்ற இணையதள பக்கத்திற்கு சென்று புதுப்பிக்க வேண்டிய ஆதார் கார்டின் நம்பரை என்டர் செய்யவும்.பிறகு கொடுக்கப்பட்டிருக்கும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு செய்யவும்.அதன் பிறகு OTP பொத்தானை கிளிக் செய்தால் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் OTP எண்ணை என்டர் செய்யவும்.

அடுத்து “ஆதார் புதுப்பிக்கவும்” என்ற ஆப்ஷனை கிளிக் செய்து புகைப்படம்,பெயர்,பிறந்த தேதி,முகவரி,மொபைல் எண் உள்ளிட்டவற்றை புதுப்பித்துக் கொள்ளலாம்.

நீங்கள் புதுப்பித்த ஆன்லைன் இ-ஆதாரை 15 நாட்களுக்கு பிறகு PVC கார்டாக மாற்றிக் கொள்ள இயலும்.