அமித்ஷாவிடம் சரண்டர் ஆன ரஜினியின் குடும்பம்!

0
145

ரஜினியை முன்னிறுத்திக் கொண்டு ஆளும் கட்சியான அதிமுகவை மிரட்டிப் பார்த்த பாஜக தலைமைக்கு ரஜினியின் அரசியல் தொடர்பான அறிவிப்பு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. அதிமுகவின் தேர்தல் பிரச்சார ஆரம்ப நாளில் கூட்டத்தில் பேசிய அந்த கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி .முனுசாமி பாஜகவின் பெயரை தெரிவிக்காமல் அந்த கட்சியின் நடவடிக்கைகளை கடுமையாக சாடினார். முனுசாமியின் முழு பேச்சையும் மொழிமாற்றம் செய்து டெல்லிக்கு அனுப்பி வைத்தது மத்திய உளவுத்துறை. கே.பி. முனுசாமி பேச்சை கேட்ட பாஜகவின் தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்பட்ட நிலையில், இது தொடர்பாக எடப்பாடியை எச்சரிக்கை செய்ய முடிவு செய்யப்பட்டது என்ற நிலையிலேதான், 27ஆம் தேதி இரவு அமித்ஷாவிடம் ரஜினியின் உடல்நிலையையும், அரசியலை பற்றியும் அவருடைய குடும்பத்தார் கவலையோடு ஆதங்கப்பட்டு இருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி சந்திக்க அவசர அவசரமாக அனுப்பி வைக்கப்பட்டார் தமிழக பாஜகவின் தலைவர் முருகன்.

இந்தச் சந்திப்பானது எவ்வாறு இருந்தது என்று தமிழக பாஜக விசாரித்தபோது, அதிமுக மூத்த தலைவர் கே.பி. முனுசாமி பேச்சு எங்கள் தலைமையை கோபப்படுத்தி இருக்கின்றது. இந்த சூழலில்தான் 27ஆம் தேதி இரவு ரஜினி வீட்டிலிருந்து அமித்ஷாவை தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார்கள் .கட்சி தொடங்கவில்லை என்று ரஜினி அறிக்கை கொடுத்து இருக்கின்றார் என்பதையும் சொல்லி இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

Previous article14ஆம் தேதி மீண்டும் தமிழகம் வரும் மத்திய உள்துறை அமைச்சர்! காரணம் என்ன தெரியுமா?
Next articleஸ்டாலினை கதறவிட்ட மாவட்டச் செயலாளர்!