ஸ்டாலினை கதறவிட்ட மாவட்டச் செயலாளர்!

0
250

செந்தில்பாலாஜி தொடர்பாக சொல்லவேண்டுமென்றால், கதை என தெரிவிப்பார்கள் என்று பிரமித்துப் போல் இருக்கும் என பிரமித்துப் போயிருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின்.

கரூர் மாவட்டம் குப்பிச்சிப்பாளையத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய ஸ்டாலின் இன்று காலை வரை நான் பல மாவட்டத்திற்கு போயிருந்தாலும், இந்த கரூர் மாவட்டத்திற்கு வந்தபோது எனக்கு என்ன தோன்றுகிறது என்று கேட்டால், இதுவரையில் நாம் பார்த்த கிராம சபை கூட்டத்தை விடவும் மிக எழுச்சியுடன் இந்தக் கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார்.

இந்த கிராம சபை கூட்டத்தை சிறப்பான முறையில் நம் கட்சியின் மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜி வடிவமைத்திருக்கிறார். அவர் கட்சியில் வந்து சேர்ந்த பொழுது எந்த உணர்வோடு இனைந்தாரோ நான் எந்த நோக்கத்தோடு அவரை கட்சியில் இனைத்தேனோ அதை விடவும் பன்மடங்கு வேகமாக அவர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் .செந்தில்பாலாஜி தொடர்பாக சொல்லவேண்டும் கொல்லன் தெருவில் ஊசி விற்ற கதை ஆகிவிடும் உங்களிடம் தெரிவிக்க வேண்டிய அவசியம் கிடையாது.

நான் இந்த நேரத்தில், இங்கே வருகின்ற வழியில் வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நான் தங்கியிருந்த இடத்திலிருந்து இங்கே 15 நிமிடங்களில் வந்து சேர்ந்துவிடலாம் ஆனால், எனக்கு இரண்டு மணி நேரம் தேவைப்பட்டிருக்கிறது .அந்த அளவிற்கு சிறப்பாக அந்த வரவேற்பு நிகழ்ச்சி இருந்தது இவ்வளவு பெரிய கூட்டத்தை கிராம சபை கூட்டம் என்று மட்டும் சொல்லிவிட இயலாது. என அவர் செந்தில் பாலாஜியை பாராட்டினார்.

Previous articleஅமித்ஷாவிடம் சரண்டர் ஆன ரஜினியின் குடும்பம்!
Next articleஎங்களுடைய நிலை எப்பொழுதும் மாறாது! அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here