மறைந்த நடிகர் மனோ பாலாவின் கடைசி ஆசை!! ஆனால் பயனில்லாமல் போனது!!

Photo of author

By Rupa

மறைந்த நடிகர் மனோ பாலாவின் கடைசி ஆசை!! ஆனால் பயனில்லாமல் போனது!!

உடல்நலக் குறைவால் நேற்று காலமன பிரபல நடிகர் மனோபாலா அவர்களின் கடைசி ஆசை நடிகர் கமல்ஹாசன் அவர்களுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்பதுதானாம்.

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என்று பன்முக திறமை கொண்ட நடிகர் மனோபாலா அவர்கள் கல்லீரல் தொடர்பான பிரச்சனையால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். நடிகர் மனோ பாலா மறைந்த செய்தியை கேட்டு திரையுலகமும் ரசிகர்களும் அதிர்ச்சியில் ஆழ்நதனர்.

நடிகர் விஜய், நடிகை ராதிகா சரத்குமார், நடிகர் சமுத்திரக்கனி, நடிகர் மன்சூர் அலிகான் மற்றும் பலர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர். பிறகு நடிகர் மனோ பாலா அவர்களின் உடல் பிருந்தவனம் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதி காரியங்கள் செய்யப்பட்டு இன்று தகனம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் நடிகர் மனோ பாலா அவர்களின் இறுதி ஆசை நடிகர் கமல்ஹாசன் அவர்களுடன் நடிக்க வேண்டும் என்பதுதான். அந்த ஆசை இந்தியன் 2 படம் மூலமாக நிறைவேறியது. ஆனால் அந்த படத்தை நடிகர் மனோ பாலா அவர்கள் பார்க்காமல் சென்றுவிட்டார் என்பது தான் மிகப் பெரிய வருத்தத்தை அளிக்கின்றது.

நடிகர் கமல் ஹாசன் அவர்கள் தான் நடிகர் மனோ பாலா அவர்கள் சினிமாவிற்குள் நுழைய காரணமாக இருந்தவர். இருந்தும் இத்தனை ஆண்டுகளில் நடிகர் கமல்ஹாசன் அவர்களுடன் நடிகர் மனோ பாலா அவர்கள் இணைந்து நடித்தது இல்லை. நடிகர் மனோ பாலா மறைந்த செய்தியை கேட்ட நடிகர் கமல்ஹாசன் அவர்கள் இரங்கல் தெரிவித்தார்.

அதில் நடிகர் கமல் ஹாசன், ” இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட இனிய நண்பர் மனோ பாலா அவர்கள் இறந்த செய்தி பெரும் துயரத்தை அளிக்கின்றது. சினிமாவின் ஆர்வலர் என்பதே அவருடைய முதன்மையான அடையாளமாக இருந்தது.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், அவரது நண்பருக்கும், அவரது ரசிகர்களுக்கும் என்னுடைய ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.