பிரபல நடிகர் இறந்த பிறகு, தனது மனைவிக்குகே மகனாக பிறந்த  அதிர்ஷ்டம்!!   

அண்மையில் மறைந்த நடிகர் சேது ராமனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது  தகவலை கேட்ட ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இவர் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகமானர் சேதுராமன். தொடர்ந்து வாலிப ராஜா, சக்கப்போடு போடு ராஜா, 50 50 ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

சேதுராமன் நிஜ வாழ்வில் ஒரு மருத்துவர் என்பதால், சேதுராமன் சென்னை அண்ணா நகரில் Zi Clinic என்கிற தோல் சிறப்பு மருத்துவமனையை நடத்தி வந்தார்.

கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி இரவு திடீர் கார்டியாக் அரெஸ்ட்டால் மரணமடைந்தார். அவரது திடீர் மரணம் திரைத்துறையினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நடிகர் சந்தானம் இவருடைய நெருங்கிய நண்பன் ஆவார் இவரது இறப்பிற்கு சில பிரபல நடிகர்கள் மட்டுமே கலந்துகொண்டனர் ஏனென்றால் நாடுமுழுவதும் கொரோனா வைரஸால் பொது முடக்கம் அமலில் இருந்தது. நடிகர் சந்தானம்  தனது நண்பன் சேதுவின் உடலை  கதறியபடியே சுமந்து சென்றார் அந்த காட்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.பிரபல நடிகர் இறந்த பிறகு, தனது மனைவிக்குகே மகனாக பிறந்த  அதிர்ஷ்டம்!!   

நடிகர் சேதுராமன் இறக்கும்போது அவரது மனைவி  உமையாள் கர்ப்பமாக இருந்தார். இந்த சூழ்நிலையில் தற்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. 

இந்த செய்தி உமையாலுக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் ஜாங்கிட் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.  இதைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் தங்கள் கமெண்டில் குட்டி சேதுராமன் வந்துவிட்டார் இனி அவரை குட்டி செய்து என்றுதான் அழைக்க போகிறோம் என்று பதிவிட்டுள்ளனர். 

சேதுராமனின் குடும்ப தரப்பில், மறைந்த நடிகர் சேதுராமன் மீண்டும் பிறந்துவிட்டார் அவரது  வயதிலேயே மட்டும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது என்று உருக்கமாக தெரிவித்தனர்

 

Leave a Comment