Breaking News, Cinema

கமல் முன் நடனமாடிய மறைந்த முதல்வர் ஜெயலலிதா!! இருவரும் இணைத்த நடித்த 1 திரைப்படம்!!

Photo of author

By Rupa

கமலஹாசன் – ஜெயலலிதா இணைந்து நடித்த ஒரே திரைப்படம் :-
1974 ம் ஆண்டு ஜெயலலிதா கதாநாயகியாக நடித்த அன்பு தங்கை என்கிற படத்தில் ஒரு பாடல் காட்சியில் கமல் புத்தர் வேடத்தில் அமர்ந்திருக்க அவரின் முன் நாட்டிய நங்கையாக ஜெயலலிதா நடனம் ஆடுவார். இதுவே இவர்கள் இணைந்த ஒரே படம் ஆகும்.
கமலஹாசன் தனது சிறு வயதிலிருந்தே நடிக்கத் துவங்கியுள்ளார். இவர்
ஏவிஎம் தயாரிப்பில் உருவான “களத்தூர் கண்ணம்மா” என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் , இவர் ஜெமினி கணேசன், சிவாஜி, எம்.ஜி.ஆர் என ஜாம்பவான்களுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.மேலும், இவர் இடையில் 10 ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.பின்பு மீண்டும் வரும் பொழுது நடன இயக்குநராக பணியாற்றினார்.இவர் சினிமாத்துறையில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பண்முகங்களை கொண்டவர் ஆவார்.
தற்போது, நடிகர் கமல்ஹாசனின் திரைத்துறை வாழ்க்கை 60 ஆண்டுகளைத் தாண்டி சென்று கொண்டுள்ளது.இவர் சினிமாத்துறையில் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

காலமான ஊழியர்களின் வாரிசுகளுக்கு எப்போது அகவிலைப்படி?? தமிழக அரசு வெளியிட்ட தகவல்!!

தலைகவசம் இனி அணிந்திருந்தாலும் அபராதம்?? போக்குவரத்து காவல்துறை புதிய அறிவிப்பு!!