மறைந்த இயக்குநர் மனோபாலா  – கடந்துவந்த பாதை!

Photo of author

By CineDesk

மறைந்த இயக்குநர் மனோபாலா  – கடந்துவந்த பாதை.
திருவாரூர் அருகே நன்னிலத்தை பூர்வீகமாக கொணட மனோபாலா 1953ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி பிறந்தார். படிப்பை விட, சிறுவயது முதல் புத்தகங்கள் படிப்பது, எழுதுவது, திரைப்படங்கள் பார்ப்பது என இதிலேயே அதிகம் கவனம் செலுத்தினார்.
இதனால் மனோபாலா தனது கல்லூரி படிப்பை முடித்த உடனே  சென்னை புறப்பட்டார். சென்னை வந்த மனோபாலா முதன்முதலாக பத்திரிகையாளராக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கினார். பிறகு நடிகர் கமலஹாசன் அவர்கள் உடன் பழக்கம் ஏற்பட்டது. அதன்மூலம் இயக்கநர் பாரதிராஜா  அவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இதையடுத்து, மனோபாலா, இயக்குநர் பாரதிராஜாவின் உதவி இயக்குநர் ஆனார்.
அப்போது, இயக்குநர் பாரதிராஜாவின் உதவியாளராக இருந்த பாக்கியராஜ் அவர்கள் “சுவரில்லா சித்திரம்” என்ற படத்தை இயக்க புறப்பட்டார், அந்த இடம் மனோபாலா அவர்களுக்கு கிடைத்தது. அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இயக்குநர் மனோபாலா படிப்படியாக சினிமா நுணுக்கங்களை நன்கு கற்றுக் கொண்டார்.
 நடிகர் மனோபாலா :-
மனோபாலா நடிகராக அறிமுகமான படம் 1979ஆம் ஆண்டு வெளியான “புதிய வார்ப்புகள்”, இந்தப் படத்தை பாரதிராஜா இயக்கினார். கதையின் நாயகன் பாக்கியராஜ்.
இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் அவர்கள் இயக்கிய நாட்டாமை படத்தில்தான் நடிகர் மனோபனா அவர்கள் முழு நீள நடிகராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து கே.எஸ். ரவிக்குமார் அவர்கள் இயக்கிய “மின்சார கண்ணா” படத்திலும் முழு நேர நகைச்சுவை பாத்திரத்தில் நடித்தார்.
வில்லன் மனோபாலா :-
தனது குருநாதரான பாரதிராஜா இயக்கத்தில் “தாஜ்மஹால்” என்ற படத்தில் வில்லனாகவும் அறிமுகமானார். சந்திரமுகி, கலகலப்பு, காக்கி சட்டை, அரண்மனை என 300 படங்களுக்கு மேல் இயக்குநர் மனோபாலா அவர்கள் நடித்துள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கத்தில் நடிகர் விஜய் அவர்கள் நடிக்கும் “லியோ” படம் தான் இயக்குநர் மனோபாலாவுக்கு இறுதிப் படமாக அமைந்துள்ளது.
இயக்குநர் மனோபாலா :-
முதல் படமாக “ஆகாய கங்கை” என்னும் படத்தை இயக்கும்  வாயப்பு மனோபாலா  அவர்களுக்கு கிடைத்தது. நடிகர் மோகனை வைத்து இயக்கி இந்த படத்தை வெற்றிப்படமாக அமைந்தது.
அதன்பிறகு, சில படங்கள் தோல்வி அடைந்தாலும் மீண்டும் நடிகர் மோகன் அவர்களை வைத்து இயக்கிய “பிள்ளை நிலா” என்னும் படம், மாபெரும் வெற்றி பெற்றது. நடிகர் ரஜினிகாந்த் அவர்களை வைத்து இயக்கிய,
“ஊர்காவலன்” படமும்,  நடிகர் விஜயகாந்த் அவர்கள் வைத்து இயக்கிய “என் புருஷன் தான் எனக்கு மட்டும்தான்” படமும்  வெற்றி படங்களாக அமைந்தது.
இதுவரை 24 படங்களை இயக்கிய இயக்குநர் மனோபாலா அவர்கள் நடிகர் ஜெயராமன், வடிவேலு உள்ளிட்ட நட்சத்திரங்கள நடித்த “நைனா” திரைப்படம் தான் இயக்குநர் மனோபாலா இறுதியாக இயக்கிய படம்.
தயாரிப்பாளர் மனோபாலா :-
“சதுரங்க வேட்டை” என்னும் படத்தை தயாரித்து மாபெரும் வெற்றி பெற்றார் மனோபாலா. தயாரிப்பாளராக அவருக்கு இது முதல்படம். அதனைத் தொடர்ந்து, நடிகர் பாபிசிம்ஹா, நடிகை கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்த “பாம்பு சட்டை” படத்தையும் தயாரித்த, மனோபாலா, சதுரங்க வேட்டை படத்தின் 2ம் பாகத்தையும் தயாரித்தார்.  மொத்தமாக மூன்று படங்களை தயாரித்துள்ளார் மனோபாலா.
அவரது இழப்பு தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பாகும்.