மறைந்த கால்பந்தாட்ட வீரர் மேல் எழுந்த பாலியல் வன்புணர்வு புகார்! நீதிமன்றம் என்ன சொல்ல காத்திருக்கிறது?

Photo of author

By Hasini

மறைந்த கால்பந்தாட்ட வீரர் மேல் எழுந்த பாலியல் வன்புணர்வு புகார்! நீதிமன்றம் என்ன சொல்ல காத்திருக்கிறது?

கால்பந்தாட்ட வீரர் மாரடோனாவை தெரியாத நபர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு அவர் மிகவும் பிரபலமான விளையாட்டு வீரர். உலக அளவில் அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. 1960 ம் ஆண்டு அவர் பிறந்தார். அதன் பிறகு 1986 ம் வருடம் அவர் அர்ஜெண்டினாவின் சார்பில் உலக கோப்பையை வென்றார்.

இந்நிலையில் இவர் கடந்த வருடம் நவம்பரில் மறைந்தார். தற்போது மறைந்த கால்பந்து வீரர் மாரடோனாவின் முன்னாள் தோழி ஒருவர் அவர் மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேலும் அவருடன் கியூபாவில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். கியூபா நாட்டைச் சேர்ந்த பெண் மேவிஸ் ஆல்வாரெஸ்.

இவர் அர்ஜெண்டினா நாட்டு நீதிமன்றத்தில் தற்போது கடத்தல் வழக்கு ஒன்றையும் கொடுத்துள்ளார். அதில் தன்னுடைய 16 வயதில் கால்பந்தாட்ட வீரர் மாரடோனா உடன் பழகி வந்ததாகவும், அந்நாட்களில் தன்னை கட்டாய பாலுறவுக்கு வற்புறுத்தியதாகவும், போதைப் பொருள் பழக்கத்துக்கு அடிமையாக்கவும் செய்தார் என்றும் தெரிவித்திருந்தார்.

இதை மாரடோனாவின் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் மறுத்துள்ளனர். ஆனால் அந்த பெண் செய்தியாளர்களிடம் கூறும்போது இதை எல்லாம் கூறினார். அந்தப் பெண்ணுக்கு தற்போது 37 வயதாகிறது. அப்போது கியூபாவில் நடந்த சம்பவங்களை பிடல் காஸ்ட்ரோவின் அரசாங்கமும், அவரது நெருங்கிய கூட்டாளிகளும் மறைத்து விட்டனர் என்றும் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முன்னாள் கால்பந்தாட்ட வீரர் மாரடோனா இறந்துவிட்டார். தற்போது அவருடைய நெருங்கிய கூட்டாளிகளான முன்னாள் மேலாளர் மற்றும் அர்ஜெண்டினாவை சேர்ந்த அவருடைய நண்பர்கள் சிலரிடம் அந்தப் பெண் குறித்து வழக்கறிஞர்கள் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

அந்த வருடம் மாரடோனா கியூபாவிற்கு சென்றது அவர் போதை பொருளை பழக்கத்தை கைவிடுவதற்காகவே என்று அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். அந்த சமயத்தில்தான் தன்னுடன் பழக்கம் என்றும், தன்னை வன்புணர்வு செய்தார் என்றும் அந்தப் பெண் கூறியுள்ளார். மேலும் தன்னை மிகவும் தாக்கினார் என்றும் பகிரங்கமாக தெரிவித்து உள்ளார்.

அந்த விளையாட்டு வீரர் மீது இப்படி ஒரு புகார் வந்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த பெண் இது குறித்து மேலும் எதுவும் செய்யப் போவதில்லை என்று தெரிவித்து விட்டாலும், சில தன்னார்வ அமைப்புகள் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் அந்தப் பெண் தெரிவிக்கும்போது இது மற்ற பெண்களுக்கு விழிப்புணர்வாக இருக்க வேண்டும் என்றே தற்போது நான் வெளியே தைரியமாக சொல்வதாகவும் தெரிவித்துள்ளார். அந்தப்பெண் மேலும் இதையும் தெரிவித்துள்ளார். எனக்கு 16 வயதாக இருக்கும்போது அவருக்கு 40 வயது என்றும், அவரை நான் எந்த அளவு விரும்பினேனோ அந்த அளவிற்கு வெறுக்கவும் செய்தேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இதிலிருந்து ஒன்று தெளிவாக தெரிகிறது. உலகத்தில் எந்த ஆண் மகனும் உத்தமனும் இல்லை. ராமனும் இல்லை போல. பெண்கள் எவ்வளவு உஷாராக இருக்கிறோமோ அவ்வளவு நல்லது.