அஜித்தின் ‘ஏகே 62’ படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது? வெளியானது லேட்டஸ்ட் அப்டேட் !

0
227

தமிழ் திரையுலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான அஜித்த்தின் ‘துணிவு’ படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததோ இல்லையோ, களத்தில் தனக்கு போட்டியாக இருந்த விஜய்யின் ‘வாரிசு’ படத்தை விட அதிகமாக பாக்ஸ் ஆபிசில் வசூல் செய்து இருக்கிறது. ஹெச்.வினோத் மற்றும் அஜித் கூட்டணியில் மீண்டும் வெளிவந்துள்ள ‘துணிவு’ படம் இதுவரையில் ரூ.100 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆபிசில் வசூல் செய்திருக்கிறது. போனி கபூர் தயாரித்திருக்கும் இந்த படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியார், மமதி சாரி, சமுத்திரக்கனி, ஜான் கொக்கேன், சிபி சந்திரன், அமீர், பாவ்னி ஆகிய நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். ‘துணிவு’ படத்தை தொடர்ந்து அஜித் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் படம் விக்னேஷ் சிவன்-அஜித் கூட்டணியில் உருவாகும் ‘ஏகே 62’ தான்.Ajith Kumar and Vignesh Shivan's AK62 to begin this month? Here's  everything you need to know about the film | PINKVILLA

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘ஏகே 62’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. இதுகுறித்து வெளியாகியுள்ள லேட்டஸ்ட் தகவல்களின்படி, ‘ஏகே 62’ படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் மும்பையில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு பணிகள் கிட்டத்தட்ட 35 முதல் 40 நாட்கள் வரையிலும் நடைபெறுவதாக கூறப்பட்டுள்ளது, தற்போது இப்படத்திற்கான ப்ரீ-ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதுதவிர ‘ஏகே 62’ படத்தில் திரிஷா இணைவார் என்று கூறப்படுகிறது, மறுபுறம் விஜய்யின் தளபதி 67 படத்திலும் த்ரிஷா இணைவதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.AK 62 OTT rights bagged by this streaming platform! Tamil Movie, Music  Reviews and News

மேலும் நடிகர் அரவிந்த் சாமி ‘ஏகே 62’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கப்போவதாகவும் முன்னர் செய்திகள் வெளியானது. தனி ஒருவன், போகன் போன்ற படங்களில் அரவிந்த் சாமி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருந்தது. அடுத்ததாக இந்த படத்தில் நகைச்சுவை நடிகராக இருந்து கதாநாயகனாக உயர்ந்த சந்தானமும் நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார் மற்றும் இப்படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமையை மிகப்பெரிய தொகைக்கு பிரபல ஓடிடி நிறுவனம் ஒன்று வாங்கியுள்ளதாக கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Previous articleபடப்பிடிப்பு தளத்திற்கு விரைந்த ஆம்புலன்ஸ்!! பிச்சைக்காரன் கதாநாயகனுக்கு ஏற்பட்ட திடீர் விபத்து!!
Next articlePaytm பயன்படுத்துபவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி! தெரிந்துகொள்ள இதை படியுங்கள் !