நயன்தாராவால் ரசிகர்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி தகவல்!  மீண்டும் 2வது திருமணமா ? 

Photo of author

By Rupa

நயன்தாராவால் ரசிகர்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி தகவல்!  மீண்டும் 2வது திருமணமா ?

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்தனர்.சில மாதங்களுக்கு முன்பு இவர்களின் நிச்சயதார்த்தம் நடந்தது. இதனை தொடர்ந்து ஜூன் 9 அன்று இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் மாமல்லபுரம் அருகே கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில்  பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணம் முடிந்ததும் ஜுன் 9 ம் தேதி பிற்பகலில் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் திருமண போட்டோக்கள் வெளியாகும் என்றும் தெரிவித்தனர்.

இதையடுத்து, திருமண புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது சமூக ஊடக பக்கங்களில் வெளியிட அது வைரலானது.

திருமணம் முடிந்ததனை அடுத்து புதுமணத்தம்பதிகள் திருப்பதி கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். திருமணம் முடிந்த உடன் நயன்தாரா தனது கணவருடன் முதன் முறையாக தனது பிறந்த வீட்டிற்கு சென்றுள்ளார் மேலும் அவர் கொச்சியில் உள்ள பல கோவில்களுக்கும் சென்றுள்ளார்.

திருமணம் நடைபெறுவதற்கு முன்பாகவே இருவரும் பல  கோவில்களுக்கு சென்று வந்தனர். ஒருவேளை நல்லபடியாக திருமணம் நடைபெறுவதற்காக பல கோவில்களுக்கு சென்று வந்தனரா என பல கேள்விகள் எழுந்துள்ள

ன. இவர்கள் இருவரும் ஜோடியாக கோயில் கோயிலாக சுற்றியதற்கு முக்கிய காரணம், நயன்தாராவின் ஜாதகப்படி செவ்வாய் தோஷம் மற்றும் மாங்கல்ய தோஷம் என இரண்டும் இருந்துள்ளது.

எனவே அதற்கு பரிகாரம் செய்வதற்காக தான் பல கோவில்களுக்கு சென்று வந்ததாக கூறப்படுகின்றது. மேலும் பரிகாரம் செய்யும் விதமாக இருவருக்கும் மீண்டும் ஒரு முறை திருமணம் நடைபெற உள்ளது.

அதற்கான விழா  ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. மேலும் இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் தகவலாக அமைந்துள்ளது.