ராஜமௌலி – மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகும் படத்தின் அப்டேட்டை வெளியிட்ட ‘பாகுபலி’ பிரபலம் !

Photo of author

By Savitha

பிரபல இயக்குனரான எஸ்.எஸ்.ராஜமௌலியின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று, உலகம் முழுவதும் திரைப்பட விழாக்கள் மற்றும் விருது விழாக்களில் கலக்கி வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் ராஜமௌலி, தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபுவை வைத்து ஒரு ஜங்கிள் ஆக்‌ஷன்-சாகசப் படத்தை இயக்கவிருக்கிறார். இதுகுறித்து ஊடகங்களிலும் பல தகவல்கள் வெளியானது. இந்த படத்திற்க்கு இன்னும் அதிகாரபூர்வ தலைப்பு வைக்கப்படவில்லை, இப்படத்திற்கான கதையை பிரபல எழுத்தாளரும், இயக்குனர் ராஜமௌலியின் தந்தையுமான கே.வி.விஜயேந்திர பிரசாத் எழுதுகிறார்.Baahubali' writer KV Vijayendra Prasad to pen Kannada film | The News Minute

சமீபத்தில் பேட்டியில் அவர் கூறுகையில், ராஜமௌலி மற்றும் மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகும் படம் ஒரு உண்மையான சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது. இப்படத்தின் பணிகள் அடுத்த ஆண்டில் தொடங்கப்படவுள்ளது, இந்த படத்தில் நடிப்பது உடல் ரீதியாக கடினமாக இருக்கும் என்று ஏற்கனவே மகேஷ் பாபு ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். மேலும் இந்த படம் ஒரே பாகமாக முடிந்துவிடாது என்றும், இப்படத்திற்கு தொடர்ச்சி இருக்குமென்றும் கூறியுள்ளார்.Interesting update about Mahesh Babu- Rajamouli's film

இந்த தொடர்ச்சிகளில் படத்தின் கதை மாறினாலும், படத்தின் மைய கதாபாத்திரங்களில் எவ்வித மாற்றமும் இருக்காது என்று கூறியுள்ளார். காடுகளில் செய்யப்படும் சாகசங்கள் நிறைந்த கதையம்சம் கொண்ட ஒரு படத்தை படத்தை இயக்கவேண்டும் என்பது ராஜமௌலியின் நீண்ட நாள் ஆசை என்றும் அவர் கூறியுள்ளார்.