பிரம்மாண்ட தயாரிப்பான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்..!!!

0
289

கல்கியின் சரித்திர நாவலான ‘பொன்னியின் செல்வன்’ அதே பெயரில் திரைப்படமாக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது.இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள இந்த படம் 2 பாகங்களாக தயாராகி உள்ளது.இப்படத்தில் மிகப்பெரிய நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.மேலும் இந்த படத்திற்காக இவர்கள் பல்வேறு விதமாக தங்களை தயார்படுத்தி வருகின்றனர் .

ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் முழுவதுமாக நிறைவடைந்து விட்டது .

இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் முக்கிய அப்டேட்டை நடிகை திரிஷா வெளியிட்டுள்ளார். அந்த அப்டேட் என்னவென்றால் இப்படத்தின் டப்பிங் பணிகளை படக்குழு தொடங்கி உள்ளதாகவும், தற்போது அவர் சொந்த குரலில் டப்பிங் பேசி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் டப்பிங் ஸ்டூடியோவில் எடுத்த புகைப்படம் ஒன்றையும் அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது பொன்னியின் செல்வன் படத்திற்காக தனது சொந்த குரலில் டப்பிங் பேசி வருகிறார் திரிஷா. மங்காத்தா, மன்மதன் அம்பு உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே நடிகை திரிஷா தனது சொந்த குரலில் டப்பிங் பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleடிஎன்பிஎஸ்சி குரூப்4 தேர்வர்களுக்கு இன்று வெளியான முக்கிய அறிவிப்பு.!!
Next articleபிரசவ வலியால் துடித்த பெண்ணை 11 மணி நேரம் காத்திருக்க வைத்த அவலம்!