பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் 90 வயதான இவர் கடந்த மாதம் உடல்நிலை பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் தீவிர சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர் இந்நிலையில் உடல்நலம் தேறியதையடுத்து நேற்று அவர் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் நான் 28 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தேன் எனக்கு நிமோனியா பாதிப்பு இருப்பது டாக்டர்களின் பரிசோதனையில் தெரியவந்தது டாக்டர்கள் முழுமையாக குணமடைந்து வீட்டுக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர் கடவுளின் ஆசிர்வாதத்துடன் வீடு திரும்பி உள்ளேன் எனக்காக பிரார்த்தனை செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் ரசிகப் பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என லதா மங்கேஷ்கர் தன் ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்.
லதா மங்கேஷ்கர் சுமார் 20 க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடல் பாடியுள்ளார். இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா தாதாசாகேப் பால்கே உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.