3 ஆண்டுகள் காத்திருந்து விண்ணில் ஏவப்பட்ட அதிநவீன சீன ராக்கெட் தோல்வி!

Photo of author

By Parthipan K

சீனாவின் குய்சோ-11 ராக்கெட் விண்ணில் ஏவிய சில நிமிடங்களில் வெடித்து சிதறியது.இதனால் அதிர்ச்சி அடைந்த விஞ்ஞானிகள் இதற்கான காரணம் குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.

சீனா குய்சோ – 1A என்ற ராக்கெட்டை மூன்று ஆண்டுகள் காத்திருந்து மேம்படுத்தி புதிய தொழில் நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டது.இந்த புதிதாக வடிவமைக்கப்பட்ட ராக்கெட்டிற்கு குய்சோ- 11 என்று பெயரிடப்பட்டது.இந்த ராக்கெட் 2.2 மீ விட்டதையும்,700 டன் எடையும் கொண்டது.இந்த ராக்கெட் சூரியனின் சுற்று பாதையில் 1000 கிலோ எடை உள்ள செயற்கைக்கோளை நிலை நிறுத்தும் திறன் கொண்டது.

மேலும் இந்த ராக்கெட்டை சீனாவின் எக்ஸ்பேஸ் டெக்னாலஜி கார்ப்பரேஷன் உருவாகியுள்ளது.குய்சோ-11 ராக்கெட் இரண்டு செயற்கைகோள்களுடன் வடமேற்கு சீனாவில் உள்ள ஜியுகுவான் ராக்கெட் தளத்தில் விண்ணில் செலுத்தப்பட்டது.

ஆனால் இந்த ராக்கெட் ஏவப்பட்ட ஒரு சில நிமிடங்களிலேயே வானில் வெடித்து சிதறி தோல்வியை தழுவியது.மேலும் இந்த ராக்கெட் வெடித்து சிதறிய காரணம் குறித்து ஜியுகுவான் விண்வெளி மையத்தின் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.