இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது பி.எஸ்.எல்.வி. சி 53 ஏவுகணை! அதன் தொழில்நுட்ப வசதிகள்!
நடப்பாண்டில் முதலில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி – சி52 என்ற ராக்கெட்மூலம் இந்த 21 செயற்கைக் கோள்களும் பிப்ரவரி மாதம் அனுப்பப்பட்டது. இதனிடையே Risat-1A செயற்கைக் கோள் புவிவட்டப் பாதையில் 529 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை நிறுத்தப்படும். வேளாண்மை காடுகள் வளம், தாவரங்கள், பயிர்கள், மண்ணின் ஈரப்பதம்,வெள்ளம், குறித்த துல்லியமான விவரங்களையும் படங்களையும் இந்த செயற்கைக் கோள் அனுப்பி வைக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். தற்போது இந்த மாதம் முதன்மையானதாக டி எஸ் இ ஓ செயற்கைக்கோள் கோள் தெளிவாக வண்ணப் புகைப்படங்களை எடுப்பதற்காகவும் இவை 365 கிலோ கொண்டதாகவும் தயாரிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவதாக நியூசர் செயற்கைக்கோள் இரவு ,பகல், மழை ,வெயில் அனைத்து வானிலை சூழ்நிலைகளிலும் புவியை துல்லியமாக படம் எடுக்கும் இது 155 கிலோ எடை கொண்டதாகவும் தயாரிக்கப்பட்டுள்ளது. மூன்றாவதாக 2.8 கிலோ எடை கொண்ட ஸ்கூப்- 1 செயற்கைக்கோள் விண்வெளியில் உள்ள கல்விக்கு சம்பந்தப்பட்ட புகைப்படங்களை எடுப்பதற்காக சிங்கப்பூரை சேர்ந்த நன்மையா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மாணவர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று கோள்களும் பி.எஸ்.எல்.வி. சி 53 என்ற பெயர் கொண்ட ராக்கெட் மூலமாக இன்று மாலை 6.02 விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்நிலையில் இந்த ராக்கெட் உடன் சிங்கப்பூர் நாட்டிற்கு சொந்தமான டி .எஸ்- இ.ஓ உட்பட மூன்று செயற்கைக்கோள்களும் செலுத்தப்பட உள்ளது.எனவும் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.