பாய்ந்த அமைச்சர்! பதுங்கிய எதிர்க் கட்சித் தலைவர்! வழக்கம் போல முட்டு கொடுத்த கழக நிர்வாகி

0
154
DMK Leader MK Stalin-News4 Tamil Latest Online Tamil News Today
DMK Leader MK Stalin-News4 Tamil Latest Online Tamil News Today

பாய்ந்த அமைச்சர்! பதுங்கிய எதிர்க் கட்சித் தலைவர்! வழக்கம் போல முட்டு கொடுத்த கழக நிர்வாகி

தமிழகத்தில் பல வருடங்களாக நடத்தப்படாமல் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரு வழியாக தேர்தல் நடத்த ஆளும் தரப்பு தயாராகி அறிவிப்பு வெளியாகியது. இவ்வளவு நாளாக காரணம் சொல்லி கொண்டிருந்த ஆளும் கட்சி தற்போது தேர்தலை நடத்த தயாராகியுள்ளது எதிர்க்கட்சிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதற்கு காரணம் சமீபத்தில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் ஏற்கனவே திமுக வசமிருந்த இரண்டு தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றியது தான் என்பது பெரும்பாலானோருக்கு தெரியும்.

மேலும் இது வரை நடத்தப்படாமல் இருக்கும் உள்ளாட்சி தேர்தலை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று திமுக தரப்பு முயற்சித்து வருகிறது. அதற்கு வெளிப்படையாக பல்வேறு காரணங்கள் கூறினாலும் மறைமுகமாக நடந்து முடிந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வாங்கிய பலமான அடி தான் என்றும் கூறப்படுகிறது.

law minister cv shanmugam-news4 tamil latest political news in tamil
law minister cv shanmugam-news4 tamil latest political news in tamil

இந்நிலையில் தேர்தல் நடத்தப் பட்டால் அது ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவும், திமுகவிற்கு எதிராகவும் தான் அமையும் என்று எண்ணி எவ்வாறாவாது இந்த தேர்தலை சட்டப் பூர்வமாக நிறுத்த வேண்டும் என்று திமுக தரப்பு முயன்று வருகிறது. இதனை ஆளும் கட்சி சட்டத்துறை அமைச்சராக பதவி வகிக்கும் சி.வி. சண்முகம் சிறப்பாக கையாண்டு வருகிறார்.

இதனால் திமுக தரப்பு அமைச்சர் மீதான தனிப்பட்ட விமர்சனங்களை எழுப்ப ஆரம்பித்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்கள் சந்திப்பில் திமுக தலைவர் ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்து விளாசி எடுத்தார். குறிப்பாக தனிபட்ட முறையில் விமர்சனம் செய்ய வேண்டும் என்றால் தனியாக ஒரு மேடை போடட்டும் அங்கு என்னைப் பற்றி அவர் பேசட்டும், அவரை பற்றி நான் பேசுகிறேன் என ஸ்டாலினுக்கு நேரிடையாகவே சவால் விட்டிருந்தார் அமைச்சர் சி.வி.சண்முகம்.

இதுகுறித்து திமுகவின் சார்பாக அக்கட்சியின் எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன், அண்ணா அறிவாலயத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியின் போது அவர் கூறியதாவது,  நாங்கள் தேர்தல் ஆணையத்தை அச்சுறுத்தவில்லை. திமுக நீதிமன்றத்தை நாடியதால் தான் முறைப்படுத்தாத 9 மாவட்டங்களில் தேர்தல் தவிர்க்கப்பட்டது. 

மேலும் முறையாக உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்ற அடிப்படையில் தான் தேர்தல் ஆணையத்தை அணுகினோம். இன்றைய பேட்டியில் அமைச்சர் சி.வி. சண்முகம் நிதானத்தில் பேட்டி கொடுத்தாரா? என்பது தெரியவில்லை. அவருடன் ஒரே மேடையில் விவாதிக்க நான் தயார் என்றும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் ஸ்டாலினுக்கு எதிராக சரவெடியாக சவால் விட இதையாவது திமுக தலைவர் ஸ்டாலின் நேரிடையாக எதிர் கொள்வாரா? என்று எதிர்பார்த்திருந்த நிலையில் வழக்கம் போல அவர் பதுங்கி கொண்டு கட்சி நிர்வாகி ஒருவர் மூலம் பதிலளிக்க வைத்துள்ளார்.

பாமக இளைஞர் அணி தலைவரும் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் திமுக தலைவரிடம் ஆரம்பித்து வைத்த நேருக்கு நேர் விவாதம் என்ற சவால் தற்போது அரசியல் தலைவர்கள் ஒவ்வொருவரும் அவரை நோக்கி நேருக்கு நேர் விவாதம் செய்ய தயாரா? என்று சவால் விடும் அளவிற்கு கொண்டு வந்து விட்டது.

Previous articleகுடியுரிமை சட்டம் குறித்து பிரபல இயக்குனர்: வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்
Next articleஆர்.கே.நகருக்கு இப்படி ஒரு சோதனையா? திரையுலகம் அதிர்ச்சி