சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக அமர்கிறாரா எடப்பாடி பழனிச்சாமி? அதிர்ச்சியில் திமுக!

0
63

தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டசபைத் தேர்தலில் செலுத்தப்பட்ட வாக்குகள் நேற்றைய தினம் காலை 8 மணி முதல் என்ன தொடங்கப்பட்டன. அந்த வாக்கு எண்ணிக்கை தற்போது வரையில் நீடித்து வருகிறது.இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் முன்னரே விளக்கம் அளித்திருந்தது. அதாவது எப்போதுமே வாக்கு எண்ணும் மையத்தில் 14 மேஜைகள் போட்டு வாக்குகள் அனைத்தும் எண்ணப்படும்.ஆனால் தற்சமயம் அந்த மேதைகளின் அளவு பாதியாக குறைக்கப்பட்டு இருப்பதால் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் தெரிய வருவதில் தாமதம் ஏற்படும் என்று தேர்தல் ஆணையம் முன்னரே அறிவித்து இருந்தது.

அதன்படி நேற்று காலை 8 மணியளவில் தொடங்கிய வாக்கு எண்ணிக்கை தற்போது வரையில் நீடித்து வருகிறது. இதில் திமுக கூட்டணி 158 இடங்களில் வெற்றி பெற்று மாபெரும் சாதனையை படைத்திருக்கிறது.அதேபோல அதிமுக 76 இடங்களில் மட்டும் வெற்றி பெற்று ஆட்சியை திமுகவிடம் பறிகொடுத்து விட்டது அதிமுக. தனித்து 68 இடங்களை பெற்று எதிர்க்கட்சி வரிசையில் அமர இருக்கிறது.

இதில் அதிமுக சார்பாக எதிர்க்கட்சித் தலைவராக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அமர இருக்கிறாரா அல்லது அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிச்சாமி அமர இருக்கிறாரா என்று கேள்வி தற்சமயம் இருந்திருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்பது கேபினட் அமைச்சர் என்ற அந்தஸ்து உடையது என்ற காரணத்தால், அதிமுகவில் அந்த பதவியில் அமரப் போவது யார் என்று அந்த கட்சியில் மட்டுமல்லாமல் அனைத்து கட்சிகளுமே எதிர்பார்ப்பு இருந்திருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

அனேகமாக எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த சமயத்தில் அவர் செயல்பட்ட வேகம் அவருடைய பேச்சின் முறை ஆகியவற்றை கணக்கிட்டு பார்த்தால் எடப்பாடி பழனிச்சாமி தான் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் என்ற முடிவுக்கு அதிமுகவின் தலைமை வரலாம் என்ற கருத்து எழுந்திருக்கிறது.

அதோடு மட்டுமல்லாமல் அவர் எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்தால் நிச்சயமாக திமுகவை சட்டசபையில் சமாளிப்பதற்கான அனைத்து விதமான திறமைகளும் அவரிடம் இருப்பதாகவே கருதப்படுகிறது. அதிமுகவைப் பொறுத்தவரையில் இபிஎஸ், ஓபிஎஸ் என்ற இருபெரும் ஆளுமைகள் இருப்பதாலேயே இந்த குழப்பம் ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் அதிமுக வசம் இன்னொரு தேர்வு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதாவது எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சித்தலைவராக பன்னீர்செல்வம் எதிர்க்கட்சித் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.திமுக எதிர்க்கட்சியாகவும் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சமயத்தில் துரைமுருகன் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது திமுக ஆட்சி அமைக்கும் சூழ்நிலையில், திமுக பின்பற்றிய அதே நிலையை அதிமுகவும் பின்பற்றும் என்று தெரிவிக்கிறார்கள்.