கொரோனா பாதிப்புடன் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்! அதிர்ச்சியில் பொதுமக்கள்!
கொரோனா தொற்று 3 வது அலையாக உருவாகி வரும் காலத்தில் தலைவர்கள்,பொதுமக்கள் என அனைவருக்கும் அதிக அளவு தொற்று பரவி வருகிறது.அவ்வாறு தொற்று உருதி செய்யப்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு 14 நாட்களுக்கு மேல் தனிமையில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.அரசாங்கம் தான் மக்களுக்கு முன் உதாரணமாக அனைத்து காரியங்களிலும் இருக்க வேண்டும்.ஆனால் பாகிஸ்தானில் மட்டும் மாற்றாக பிரதமரே விதிமுறைகளை மீறி உள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு வயது 68.இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இரு தினங்களுக்கு முன் தான் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.இவரது தொற்றானது அவரது மனைவிக்கும் பரவியுள்ளது.அவரது மனைவிக்கும் கொரோனா தொற்றானது உறுதி செய்யப்பட்ட நிலையில் இருவரும் வீட்டினுள்ளே சிகிச்சை பெற்று வந்தனர்.ஒருவரிடமிருந்து ஒருவருக்கு தொற்று பரவியது பாகிஸ்தான் முழுவதும் அதிக அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த திடிக்கிடும் செய்தியை மக்கள் மறப்பதற்குள் அந்த நாட்டு பிரதமரான இம்ரான் கான் மற்றொரு அதிர்ச்சிகரமான செயலை நடத்தி உள்ளார்.கொரோனா பாதித்து வீட்டில் சகிச்சை பெற்றுக்கொண்டிருக்க வேண்டிய அவர்,ஊடகக்குழுவினருடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார்.கொரோனா தொற்று உறுதியாகி சகிச்சை பெற்றுவரும் நிலையில் இவ்வாறு அவர் நடந்துக் கொண்டது மக்கள் அனைவருக்கும் பலத்த கோவத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமின்றி நாடு முழுவதும் இதற்கு எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.அந்நாட்டின் எதிர் கட்சிகள்,வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டியவரே விதிமுறைகளை மீறலாமா என சரமாரியாக கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.அதுமட்டுமின்றி கொரோனா தொற்று அவருக்கு இருப்பது தெரிந்தும் அலோசனைக் கூட்டத்திற்கு ஒப்புக்கொண்ட அனைவரின் மீதும் வழக்கு தொடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
இந்த கலவரத்தினால் அந்நாட்டு பிரதமர் பதில் கூற முடியாமல் ஊடகங்களை சந்திப்பதைப் தவிர்த்து வருகிறார்.இந்த கூட்டத்தில் பங்கேற்ற யூசுப் பெய்க் மிர்சா என்பவர் அனைவரும் கூறும் விமர்சனங்களை எதிர்த்து அவர் கூறுவது,நாங்கள் அனைவரும் அவரை பார்க்க செல்லும் போது முககவசம் அணிந்திருந்தோம்.யாரும் யாரையும் தொடவில்லை,அங்கு உணவு தண்ணீர் என எதுவும் சாப்பிடவில்லை என்றார்.அதுமட்டுமின்றி சமூக இடைவெளி விட்டு தான் அமர்ந்திருந்தோம் எனவும் கூறினார்.இவர் எவ்வளவு தான் பாதுகாப்புடன் இருந்தோம் என்று கூறினாலும் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு குணமடையாத நிலையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தியது மிகவும் குற்றமாகும்.இந்த கூட்டத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.